உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் பிரச்சார பாடலில் உள்ள சில வார்த்தைகள் மத ரீதியாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்து என்ற வார்த்தையை நீக்குமாறு அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள உத்தவ் தாக்கரே, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு அனைத்து கட்சிகள் மற்றும் தலைவர்களின் மத ரீதியிலான பேச்சுக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரச்சார பாடலில் திருத்தம் செய்யப்படும் என்று கூறி தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்துள்ளார். […]