கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபயாஸ். இவரின் சகோதரி அதே பகுதியில் ஒரு ரொட்டி கடையை நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான ராகேஷ் என்ற இளைஞர் ஒருவர், அந்த கடைக்கு ரொட்டி வாங்க வந்திருக்கிறார். அப்போது ராகேஷிடம் கடையின் உரிமையாளரான ஃபயாஸின் சகோதரி, கடையில் ரொட்டிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறியிருக்கிறார். இருப்பினும் அதை கேட்காமல் ராகேஷ் ரொட்டி வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்ததால், இருவருக்கும் இடையே கடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அந்த நேரம் கடையில் அப்பெண் மட்டும் தனியாக இருந்ததால் தனது சகோதரரான ஃபயாஸிடம் நடந்ததை கூறி அவரை உதவிக்கு அழைத்துள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ஃபயாஸ் ராகேஷிடம் நடந்தவற்றை கேட்டு தகராறு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ஃபயாஸ் ராக்கேஷை கடுமையாக தாக்கியதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த ராகேஷின் குடும்பத்தினர் அளித்த புகாரை முதலில் போலீஸார் பதிவு செய்யாமல், குற்றவாளிகளிடம் இருந்து ஏதேனும் நிவாரண தொகையை ராகேஷின் குடும்பத்திற்கு பெற்றுத்தர முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், காவல் கண்காணிப்பாளர் சங்கீதாவின் உத்தரவின் படி, குடும்பத்திரனர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸ் மற்றும் அவரின் சகோதரி ஆகிய இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகள் 109 (துணைத் தண்டனை), 504 (அமைதியைக் கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்), 302 (கொலைக்கான தண்டனை) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சட்டம் 1989 கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs