சென்னை ஒவ்வொரு பாடலாசிரியரும் பாடலுக்கு உரிமை கோரினால் என்னாகும் என இளையராஜவிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு மேல் இசை அமைத்துள்ளதுடன் தற்போதும் பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இளையராஜாவின் பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக காப்புரிமை கேட்டு, இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது […]