வயநாடு பிரதமர் மோடி மக்களைத் திசை திருப்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். வரும் 26 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது. அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பிரியங்கா காந்தி, “மக்களுக்காகப் […]