பெங்களூரு அணியின் ரசிகர்கள் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி இனி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று, மற்ற ஆட்டங்களின் முடிவு மற்றும் ரன்ரேட் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும். விளையாடிய 8 ஆட்டங்களில் பெங்களூரு அணி 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 379 ரன்கள்) ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு அணியின் ரசிகர்கள் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் விசுவாசம்தான் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது,

அளவுகடந்த ஆதரவு, அர்ப்பணிப்பு, அன்பிற்கு பெங்களூரு அணி ரசிகர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர். எங்கள் ரசிகர்கள் குடும்பத்தின் அங்கமாக உள்ளனர்.இவ்வாறு கோலி கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.