சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு மே 2-ம் தேதி நேரில் ஆஜராக உள்ளதாக, பாஜக நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலையொட்டி, பறக்கும்படை நடத்திய சோதனையின்போது, சென்னையில் இருந்து நெல்லைக்கு எடுத்துச்சென்ற ரூ.4 கோடி பணம், தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. […]