அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கண்காணிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் சமுதாய ஆலோசனைக் குழுக்களை நியமிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்காணிப்பு செய்வதற்காக சமுதாய ஆலோசனை குழுவொன்று தொண்டர் அடிப்படையில் நியமிப்பதற்காக மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரமளிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக 25.04.2024 அன்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
12. அரச அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் பற்றிய கண்காணிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் சமுதாய ஆலோசனைக் குழுக்களை நியமித்தல்
இலங்கையின் அனைத்துப் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அரசால் பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், குறித்த வேலைத்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை கண்காணிப்பதற்காக சமூகத்தை இணைத்துக் கொள்வதன் மூலம் ஆட்சியின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், சமூகத்தின் அறிவையும் பங்கேற்புக்களையும் இவ்வேலைத்திட்டங்களிலும் கருத்திட்டங்களிலும் பெற்றுக்கொள்வதற்காகவும், ஒவ்வொரு பிரதேசங்களிலும் திட்டவட்டமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவ்வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் இயலுமை கிட்டும். அதற்கமைய, ‘உரித்து’ காணி உரிமை வேலைத்திட்டம், நகர வீட்டுரிமை வேலைத்திட்டம், மலைநாட்டு பத்தாண்டு வேலைத்திட்டம், விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம், மற்றும் அரிசி விநியோக வேலைத்திட்டம் போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அந்தந்தப் பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்புடன் கண்காணிப்பு செய்வதற்காக சமுதாய ஆலோசனை குழுவொன்று தொண்டர் அடிப்படையில் நியமிப்பதற்காக மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரமளிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.