ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 15 விலை குறைக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் ஐபோன் 15 வாங்குபவர்களுக்கு இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மூலம் தள்ளுபடி விலையில் இந்த மாடலை வாங்கலாம். 128GB சேமிப்பகத்துடன் அடிப்படை மாடலை வாங்க ஆர்வமுள்ளவர்கள், தற்போது நடைமுறையில் உள்ள கேஷ்பேக் சலுகையிலிருந்தும் பயனடையலாம். இது மொபைலின் விலையை ரூ.13,900 குறைக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா உட்பட உலகளவில் வெளியிடப்பட்ட ஐபோன் 15 ஆனது ஆப்பிளின் சக்திவாய்ந்த A16 பயோனிக் சிப்பைக் கொண்டுள்ளது. இரட்டை பின்புற கேமரா அமைப்பும் உள்ளது.
இப்போது இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 15-ன் தள்ளுபடி விலை பிளிப்கார்ட் மூலம் கிடைக்கிறது. மாடலின் தற்போதைய விலை 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கு ரூ.65,999 ஆகும். கடந்த ஆண்டு அறிமுகமானபோது, ஸ்மார்ட்போனின் விலை ரூ.79,900. அதாவது தற்போதைய தள்ளுபடி ரூ.13,900 கொடுக்கப்படுகிறது. கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் ரூ.6,000 கேஷ்பேக் பெறலாம்.
Flipkartல் ஐபோன் 15ஐ உங்கள் கார்ட்டில் சேர்க்கும் போது, கூடுதல் ‘பாதுகாக்கப்பட்ட பேக்கேஜிங் கட்டணம்’ ரூ. 99 தானாகவே சேர்க்கப்படும், இதன் மொத்த விலை ரூ.66,098 ஆக உயர்த்தப்படும். இருப்பினும், Google Pay UPI பரிவர்த்தனைகள் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 தள்ளுபடியிலிருந்து பயனடையலாம், அப்போது மொபைலின் விலை ரூ.65,098 ஆகக் குறைக்கப்படுகிறது. ஃபிளிப்கார்ட் முன்பு பிப்ரவரியில் இதேபோன்ற தொகையை இந்த மொபைல் மாடலுக்கு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் ஐபோன் 15 கேமரா, விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்
iPhone 15 ஆனது 48MP பிரதான கேமராவுடன் 26mm குவிய நீளம், 2-மைக்ரான் குவாட் பிக்சல் சென்சார் மற்றும் 100 சதவிகித ஃபோகஸ் பிக்சல்களுடன் வருகிறது. ஐபோன் 15 புதிய கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஐபோன் 15 இல் இரவு நைட்மோடும் சிறப்பாக உள்ளது. ஐபோன் 14 ப்ரோவை இயக்கும் பயோனிக் ஏ16 சிப் ஐபோன் 15 இல் பொருத்தப்பட்டுள்ளது. இது ஏ15 பயோனிக் சிப்செட்டை விட குறைந்த சக்தியைப் பயன்படுத்துகிறது. ஐபோன் 15 ஆனது வண்ணமயமான பின் கண்ணாடி மற்றும் புதிய விளிம்புடன் வருகிறது.
டைனமிக் ஐலேண்ட் புரோ அல்லாத ஐபோன் மாடல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மூன்று கட்டமைப்புகளில் வெளியிடப்பட்டது: 128GB, 256GB மற்றும் 512GB முறையே ரூ.79,900 மற்றும் ரூ.89,900 இல் தொடங்குகிறது. ஆப்பிள் அதன் செமிகண்டக்டர் கூறுகளுக்கான ஆர்டர்களை சப்ளையர்களிடமிருந்து 15 சதவீதம் வரை குறைத்துள்ளது. 2023 புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது ஐபோன் 15 மற்றும் வரவிருக்கும் ஐபோன் 16 தொடருக்கான ஏற்றுமதிகளில் 10 சதவீதம்-15 சதவீதம் சரிவு ஏற்படும் என்று TFI செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் சமீபத்தில் கணித்துள்ளார். இதனால் கூட இந்த விலை குறைப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.