கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு கொடைக்கானலில் ஓய்வெடுத்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இதையடுத்து தேர்தலில் வென்று முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் வரவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் 2024 மக்களவைத் தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்துள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை நமது நாற்பதும் நமதே என்ற முழுக்கத்துடன் தமிழகம் முழுவதும் மேற்கொண்டார்.
இம்முறை ஓய்வுக்காக மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சென்டிமென்ட் காரணமாக கொடைக்கானல் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 29 முதல் மே 4 வரை கொடைக்கானலில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். இதற்காக 1500 போலீஸாரை குவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை செய்து வருகிறது. திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப் ஆகியோர் கொடைக்கானலில் ஆய்வு செய்தனர். முதல்வர் செல்லும் சாலை தங்கும் பகுதியான பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குடும்பத்துடன் 3 நாள்களாக கொடைக்கானலில் தங்கியிருக்கிறார். திமுக அமைச்சர்கள் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் கடந்த வாரம் கொடைக்கானலில் ஓய்வெடுத்துவிட்டு சென்றனர். இதுபோல அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு அனல் காற்று வீசுகிறது எனவும், பொதுமக்கள் மதிய வேளையில் வெளியே நடமாட வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோடையை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். கோடை விடுமுறையும் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமில்லாது அண்டைமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிறைந்துவிட்டன. இந்நிலையில் அரசியல்வாதிகளின் வருகை அதிகாரித்தால் அவர்களுக்கென போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது சுற்றுலா பயணிகள் புலம்புகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs