மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; ஜானிக் சினெர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் (இத்தாலி), சக நாட்டவரான லோரென்சோ சோங்கோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய சினெர் 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லோரென்சோ சோங்கோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.