சென்னை: இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் மாலத்தீவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க ஏப்ரல் 29ம் தேதி மாலத்தீவு செல்வதாக தகவல் வெளியான நிலையில் அச்செய்தி தவறானது என்று திமுக அறிவித்து உள்ளது. ஸ்டாலின் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் ஓய்வெடுக்க செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. 18வது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் 19ந்தேதி முடிவடைந்த நிலையில், பல மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். […]