சென்னை: ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து, அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் எப்படி விநியோகம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பியதுடன், இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்தியஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 18.64 லட்சம் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ பயனாளர்கள், 96.12 லட்சம் முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்கள், 1.1 கோடி முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய, மாநில […]