CSK vs SRH Match Latest Updates: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்றைய மாலை போட்டியில் மும்பை – டெல்லி அணிகளும், இரவு போட்டியில் ராஜஸ்தான் – லக்னோ அணிகளும் மோதுகின்றன. ஞாயிற்றுக்கிழமையான நாளையும் இன்று போட்டிகள் நடைபெற உள்ளன.
மொத்தம் நான்கு போட்டிகளில் நாளை இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டிதான் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஏற்ற இறக்கமான தொடராக இருந்தாலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த தொடர் வெறித்தனமாகவே இருந்துள்ளது.
ஆர்சிபி போட்ட பக்கா ஸ்கெட்ச்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் பவர்பிளேவில் வெறித்தனமாக சிக்ஸர்களை அடித்து ரன்களை குவித்து வருகின்றனர். அவர் ஆட்டமிழந்தாலும் மிடில் ஓவர்களில் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்த மார்க்ரம், கிளாசென், அப்துல் சமாத், நிதிஷ் ரெட்டி ஆகியோரும் குறியாக உள்ளனர். இதனால், அந்த அணியின் பந்துவீச்சு ரொம்ப சுமாராக இருந்தாலும் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தது.
குறிப்பாக, அசால்டாக 250, 230 ரன்களுக்கும் மேல் குவித்து எதிரணியை சேஸிங்கில் கட்டுப்படுத்தி வந்தது. ஆனால், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 220 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யும்போது பவர்பிளேவிலேயே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதுதான் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்த ஆர்சிபி வகுத்த பிளான். அதை சரியாக செயல்படுத்தி அதன் பலனையும் ஆர்சிபி முழுமையாக பெற்றது. ஆர்சிபி பேட்டர்களை விட அன்று பந்துவீச்சாளர்களுக்கே வெற்றியில் அதிக பங்கு எனலாம்.
சிஎஸ்கேவின் பிளான்கள் என்ன?
எனவே, நாளைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை (Sunrisers Hyderabad) வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதையே பின்பற்றுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஹெட் – அபிஷேக் சர்மா ஆகியோரை தடுக்க மொயின் அலி, தீக்ஷனா ஆகியோரை பவர்பிளேவிலேயே சிஎஸ்கே முயற்சிக்க வேண்டும், அதுவும் முதல் ஓவரில். ஆர்சிபி அணி வில் ஜாக்ஸை பயன்படுத்தியது போன்று. அதேபோல், மார்க்ரம், கிளாசென் ஆகியோரை கட்டுப்படுத்த ஜடேஜா போன்ற ஸ்பின்னரை சரியாக பயன்படுத்த வேண்டும்.
அதேபோல், பந்துவீச்சாளர்களான நடராஜனை கடைசி கட்டத்தில் அட்டாக் செய்யவும், பவர்பிளேவில் அதிரடியாக ரன்களை குவிக்கவும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் ஓப்பனர்கள் தயாராக வேண்டும். இதில் டாஸ் முக்கிய பங்காற்றும். சென்னையில் பனியின் தாக்கம் அதிகம் இருப்பதால் பெரும்பாலும் டாஸ் வென்றால் பந்துவீச்சையே அணிகள் தேர்வு செய்யும். இருப்பினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் இந்த அதிரடி என்பது இதில் பல சற்று குழப்பதை ஏற்படுத்தும்.
டாஸ் வென்று பேட்டிங்…
ஏனெனில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயம் 230 ரன்களை குவித்துவிடுகிறது. இதனை கட்டுப்படுத்த போதிய திட்டம் சிஎஸ்கே அணியிடம் வேண்டும். கடந்த போட்டியில் ஹைதராபாத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அங்கு முதலில் பேட்டிங்கைதான் தேர்வு செய்தது, அங்கும் சற்று பனியின் தாக்கத்தை காண முடிந்தது என்றாலும் சன்ரைசர்ஸ் அணிக்கு சற்று அழுத்தத்தை கொடுக்க ஆர்சிபி அணி முதல் பேட்டிங்கை அதிரடியாக கையாண்டது.
இதைதான் சிஎஸ்கே அணியும் செய்ய வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) டாஸ் வென்றாலும் முதல் பேட்டிங்கை தேர்வு செய்து 220 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். எனினும் கடைசி போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே இதைதான் செய்தது, ஆனால் சரியாக வரவில்லையே என நீங்கள் கூறலாம். பந்துவீச்சில் சரியான பிளானை வைத்திருக்கும்பட்சத்தில் ஹைதராபாத்தை அடக்கிவிட முடியும்.
டாஸ் வென்று பௌலிங்
இல்லையெனில், டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தால், சன்ரைசர்ஸ் அணி 230 ரன்களுக்கு மேல் அடித்தாலும் துணிந்து சேஸ் செய்ய சிஎஸ்கே பிளான் வைக்க வேண்டும். அதற்கு நேற்றைய பஞ்சாப் – கொல்கத்தா போட்டி ஒரு உதாரணம். அந்த வகையில், சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தால் 230 ரன்களுக்கு மேல் நிச்சயம் அடித்தாக வேண்டும் இல்லை சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசினால் 230 ரன்களை சேஸ் செய்ய துணிய வேண்டும்.
பௌலர்கள் பாவம்…
ஆனால், எல்லா வகையிலும் நடப்பு ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்களின் நிலை ரொம்ப மோசமாகவே உள்ளது. எனவே, சென்னை சேப்பாக்கத்தின் பிட்ச், பேட்டிங் – பந்துவீச்சு என சிஎஸ்கே அணி மேற்கொள்ள வேண்டிய பிளேயிங் லெவன் மாற்றங்கள் அனைத்தும்தான் நாளைய போட்டியில் சிஎஸ்கேவுக்கு வெற்றியை உறுதி செய்யும்.