ரத்னம் (தமிழ்)
நடிகர் விஷால், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்னம்’. இப்படத்தில் பிரியா பவானிசங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, முரளி சர்மா, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பென்ச் பிலீம்ஸ்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஒரு நொடி (தமிழ்)
மணிவர்மன் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர், தமன் குமார், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒரு நொடி’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இங்கு மிருகங்கள் வாழும் இடம் (தமிழ்)
சசிகுமார் இயக்கத்தில் ஃபின் ஜான், ஶ்ரீதேவி உன்னி கிருஷ்ணன், சேரன் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இங்கு மிருகங்கள் வாழும் இடம்’. சைக்கோ, க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Pavi Caretaker (மலையாளம்)
வினீத் குமார் இயக்கத்தில் தீலீப், ஜான் அண்டனி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Pavi Caretaker’. சாதாரண மிடில் கிளாஸ் ஃபேலிமேனின் வாழ்கையைச் சொல்லும் காமெடி திரைப்படமான இது, ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Ruslaan (இந்தி)
கரண் எல்.புட்டானி இயக்கத்தில் ஆயுஷ் ஷர்மா, ஜகபதி பாபு, சுஷ்ரி மிஸ்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ruslaan’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Gabru Gang (இந்தி)
ஷமீர் கான் இயக்கத்தில் அபிஷேக் துஹான், ஶ்ரீஸ்டி ரோட், அவ்டர் கில், ஆர்டி பூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Gabru Gang’. பட்டம் விடும் போட்டியில் போட்டிப் போட்டு அடித்துக் கொள்ளும் இரண்டு கேங்குகளின் ஸ்போர்ட்ஸ் திரில்லர் கதைதான் இது. இத்திரைப்படம் ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Challengers (ஆங்கிலம்)
லூகா குவாடாக்னினோ இயக்கத்தில் ஜெண்டயா, மைக் ஃபைஸ்ட், ஜோஷ் ஓ’கானர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் ‘Challengers’. டென்னிஸ் விளையாட்டை மையப்படுத்திய முக்கோணக் காதல் கதைதான் இதன் கதைக்களம். ஸ்போர்ட்ஸ் ரொமான்டில் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Abigail (ஆங்கிலம்)
மேட் பெட்டிநெல்லி ஓல்பின், டெய்லர் கில்லெட் ஆகியோரது இயக்கத்தில் ஸ்டீபன் ஷீல்ட்ஸ், கைய் புஸ்சிக் ஆகியோரது எழுத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Abigail’. மெலிசா பெர்ரேரா, டன் ஸ்டீவன்ஸ், அலிஸா வெய்ர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரர், வேம்பயர் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Ghostbusters: Frozen Empire (ஆங்கிலம்)
கில் கெனன் இயக்கத்தில் பால் ரூட், கேரி கூன், ஃபின் வுல்ப்கார்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ghostbusters: Frozen Empire’. அட்வென்சர், ஃபேன்டஸி திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வார வெப்சீரிஸ்கள்
The Big Door Prize – Apple Tv
டெக்லான் லோனி, டோட் பைர்மன், ஜெனீ லாமார்க் ஆகியோர் இந்த வெப்சீரிஸை இயக்கையுள்ளனர். கிறிஸ் ஓ’டி ஓட், கேப்ரியல் டென்னிஸ், சமி ஃபோர்லாஸ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளார். எம்.ஓ. வால்ஷின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ஜாலியான மேஜிக் சாகசங்கள் நிறைந்த இந்த வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் ‘Apple Tv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Ranneeti: Balakot & Beyond (இந்தி) – Jio Cinema
சந்தோஷ் சிங் இயக்கத்தில் எல்னாஸ் நோரூசி, ஜிம்மி ஷெர்கில், அசுதோஷ் ராணா உள்ளிட்டொர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Ranneeti: Balakot & Beyond’. புல்வாமா தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Dil Dosti Dilemma (இந்தி) – Amazon Prime Video
டெபி ராவ் இயக்கத்தில் தன்வி ஆஸ்மி, அனுஷ்கா சென், குஷ் ஜோத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Dil Dosti Dilemma’. காதல், நட்பு, குடும்பம் என இளம் பெண்ணின் ஜாலியான வாழ்க்கையைச் சொல்லும் இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது.
Dead Boy Detectives – Netflix
க்ளென் வின்டர், ஆண்டி அர்மாகனியன், பீட் சாட்மன் எனப் பலர் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளனர். ஜார்ஜ் ரெக்ஸ்ஸ்ட்ரூ, ஜேடன் ரெவ்ரி, காசியஸ் நெல்சன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளார். DC காமிக்ஸ் ஒன்றை மையப்படுத்தி, ஆக்ஷன், அட்வென்சர், ஹாரர் படைப்பாக உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
வெப்பம் குளிர் மழை (தமிழ்) – Aha
பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் திரவ் ஜி, இஸ்மத் பானு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெப்பம் குளிர் மழை’. இத்திரைப்படம் ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இடி மின்னல் காதல் (தமிழ்) – Aha
பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி புவனச்சந்திரன், பவ்யா திரிகா, யாஸ்மின் பொன்னப்பா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இடி மின்னல் காதல்’. காதல் மற்றும் திரில்லர் திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Family Star (தெலுங்கு)
பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Family Star’. நடுத்தர குடும்ப இளைஞனின் காதல், நட்பு, வேலை, குடும்பத்தின் அன்பைச் சொல்லும் இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Tillu Square (தெலுங்கு)
மல்லிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொன்னலகத்த, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Tillu Square’. ஆக்ஷன், காமெடி, காதல் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Bhimaa (தெலுங்கு) – Disney+ Hotstar
ஷர்ஷா இயக்கத்தில் தொட்டேம்புடி கோபிசந்த், பிரியா பவானிசங்கர், மாளவிகா ஷர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bhimaa’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Crakk (இந்தி) – Disney + Hotstar
ஆதித்யா தத் இயக்கத்தில் வித்யுத் ஜம்வால், அர்ஜுன் ராம்பால், நோரா ஃபதேஹி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Crakk’. ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது, ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Beekeeper (ஆங்கிலம்) – Lionsgate Play
டேவிட் அயர் இயக்கத்தில் ஜேசன் ஸ்டாதம், எம்மி ரேவர்-லாம்ப்மேன், பாபி நடேரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Beekeeper’. தேனி வளர்க்கும் விவசாயியாக தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு வாழும் கதாநாயகனின் ஆக்ஷன், திரில்லர் கதைதான் இது. இத்திரைப்படம் ‘Lionsgate Play’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.