அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா…
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின் இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். அவருடன் ராஷ்மிகா, பஹத் பாசில் என முதல்பாகத்தில் நடித்த நடிகர்களே இதிலும் நடிக்கிறார்கள். தேவிஸ்ரீ பிசாத் இசையமைக்கிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜூன் தனது சம்பளத்தை 30 சதவீதம் உயர்த்தி உள்ளாராம். இதனால் அவரின் அடுத்தப்படத்திற்கான சம்பளம் ரூ.150 கோடி என டோலிவுட்டில் செய்தி உலா வருகிறது.