பெங்களூரு’ கர்நாடக முதல்வர் சித்தராமையா அம்மாநிலச் சட்டசபைக்கு வெலியே தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அண்டு கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடக அரசு அறிவித்தது. வறட்சியால், பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18 ஆயிரத்து 171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது. […]
