திருப்பதி: தெலுங்கு தேசம் கட்சியின் பிரச்சார வேனுக்குநேற்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல்ஊற்றி தீயிட்டு கொளுத்தி விட்டு தலைமறைவாகினர். அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
ஆந்திராவில் தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் வன்முறை நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. வேட்பு மனு தாக்கலின் போதே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸார், தெலுங்கு தேசம் கட்சியினர் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். சில வேட்பாளர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பதி அடுத்த வால்மீகிபுரம் மண்டலம், விட்டாலம் எனும் இடத்தில் நேற்றுஅதிகாலை, சாலையின் ஓரத்தில் தெலுங்கு தேசம்கட்சியின் பிரச்சார வேனை நிறுத்தி வைத்து, அதில் அதன் ஓட்டுநர் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள்திடீரென பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலைவேனின் மீது ஊற்றி, தீயிட்டு கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
சற்று நேரத்தில் தீ மளமளவென பரவியது. அதன் அனல் காற்று பட்டு, ஓட்டுநர் அலறிஅடித்துக்கொண்டு வேனில் இருந்து தப்பித்தார்.பின்னர் இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
தெலுங்கு தேசம் கட்சியினர் சம்பவ இடத்தில்கூடினர். இது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸாரின் செயல்தான் என கூறி, குற்றாவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி பீலேர்-மதனபல்லி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.