சென்னை: சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர். பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், மிக குறுகிய காலத்திலேயே பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிவிட்டார். மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார்.