
ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ!
தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகின்றார். தெலுங்கு படங்களை தொடர்ந்து கடந்த வருடத்தில் விஜயை வைத்து தமிழில் முதல் முறையாக 'வாரிசு' என்கிற படத்தை தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு, தமிழ் படங்களை தொடர்ந்து இப்போது ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டிலும் படத்தை தயாரிக்க களம் இறங்குகிறார். இந்த படத்தை வம்சி பைடப்பள்ளி இயக்குகிறார். இதில் கதாநாயகனாக நடிக்க முதற்கட்டமாக சாஹித் கபூர் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.