அமேசானின் கிரேட் சம்மர் சேல் விரைவில் தொடங்க உள்ளது. விற்பனையின் தேதிகளை அமேசான் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இந்த கோடைகா விற்பனையில் பல பிரபலமான ஸ்மார்ட்போன்களில் நல்ல தள்ளுபடிகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, இந்த விற்பனையில் மிகவும் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் டீல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எந்தெந்த மொபைல் போன்களில் தள்ளுபடி கிடைக்கும் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது. அமேசான் விற்பனையில் 8 OnePlus போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதாவது, OnePlus 12, OnePlus Nord CE 4, OnePlus 12R, OnePlus Nord 3 போன்ற பிரபலமான மாடல்களுக்கு இந்த தள்ளுபடிகள் இருக்கும்.
ரெட்மி சாம்சங் போன்களுக்கும் தள்ளுபடி
அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில், Redmi 13C, Redmi Note 13 Pro, Samsung Galaxy M34, Xiaomi 14, Samsung Galaxy S23, iQOO Z9, Galaxy S24, Tecno Pova 6 Pro போன்ற பல போன்களுக்கும் தள்ளுபடிகள் கிடைக்கப் போகின்றன. இந்த போன்களின் சரியான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் அவை விற்பனை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அல்லது விற்பனையின் போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன்களிலும் தள்ளுபடிகள்
அமேசான் சில புதிய விலையுயர்ந்த போன்களிலும் (ஃபிளாக்ஷிப்கள்) தள்ளுபடிகள் இருக்கும் என்று கூறுகிறது. அதேநேரத்தில் எந்த ஐபோன்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த அமேசான் விற்பனையிலும் நடந்தது போல், ஐபோன் 15 தொடரில் சில தள்ளுபடிகள் கிடைக்கலாம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், iPhone 15 தற்போது Flipkart இல் 70,999 ரூபாய்க்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் விற்பனையானது. இருப்பினும் லேட்டஸ்டாக Flipkart இன் கடைசி தள்ளுபடி விற்பனையில் இந்தந மொபைல் 65,999 ரூபாய்க்கும் கிடைத்தது.
அமேசான் விற்பனையில் சிறப்பு வகை கார்டுகளில் பலன்களைப் பெறுவீர்கள். OneCard கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் EMI விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா கார்டுகளிலும் சில தள்ளுபடி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள வங்கிகள் குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. உங்களிடம் அமேசான் பிரைம் சந்தா இருந்தால், விற்பனை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக அனைத்து ஸ்மார்ட்போன் டீல்களையும் உங்களால் பார்க்க முடியும். விற்பனையின் சரியான தேதிகளை அமேசான் விரைவில் அறிவிக்கும்.