சென்னை: சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளின் விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்திருந்தார்.
இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் வாதத்துக்காக வழக்கு இன்றைக்கு (ஏப்.30) தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.