ஒரு அரசாங்கமாக, அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்க்கும் அதே வேளையில், குழந்தைகள் மற்றும் அனைத்து மக்களும் அச்சம் மற்றும் சந்தேகம் இன்றி வாழ்வதற்கும், வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு உள்ள உரிமையை மதித்து, ஒவ்வொரு மனிதனும் கண்ணியமான மரணத்திற்கு தகுதியானவன் என்ற நம்பிக்கையில் செயற்படும் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தை தானும் தனது குழுவும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருயுத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வடக்கிலும் தெற்கிலும் மோதிக் கொள்ளும் சத்தம், தோட்டாக்களின் துர்நாற்றம், துக்கமும், வலியும், இலட்சக்கணக்கான மக்களின் மரணமும் இந்நாட்டு மக்களுக்குத் தெரியும் என அவர் நினைவு கூர்ந்தார்.
1989 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தலில் போட்டியிட்டமைக்கு மரண தண்டனை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.