இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. அதற்கான பிரசாரமும் தீவிரமாகியிருக்கிறது. ஆந்திராவில் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், ஆந்திர பிரதேச காங்கிரஸ் (ஏபிசிசி) தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா காக்கிநாடாவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது,“10 வருடங்களாக தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சி செய்து வந்தன. ஆனால், நீண்டகால கோரிக்கையாக ஆந்திர பிரதேசத்துக்கான சிறப்பு அந்தஸ்து இன்னும் பெறமுடியவில்லை.

ஆந்திர மாநிலத்துக்கு பா.ஜ.க மீளமுடியாத நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. போலாவரம் திட்டத்தையும் பா.ஜ.க புறக்கணித்துவிட்டது. இந்த உண்மைகள் இருந்தபோதிலும், சந்திரபாபு நாயுடுவும், ஜெகன் மோகன் ரெட்டியும் பா.ஜ.க-வுடன் இணைந்து செயல்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் இருவரும் பா.ஜ.க-வின் கைகூலிகள். ஆந்திராவை மீட்க இனி காங்கிரஸால் மட்டுமே முடியும். இந்தியா கூட்டணியை ஆதரித்து, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆந்திராவின் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs