கர்நாடக மாநிலத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், குமாரசாமி தலைமையிலான ஜே.டி(எஸ்) கட்சியின் முக்கிய பிரமுகருமான பிரஜ்வல் ரேவண்ணா பெயரில் பாலியல் வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், பா.ஜ.க முக்கிய நிர்வாகி ஒருவர் கடந்த ஆண்டே இந்த வீடியோ விவகாரம் குறித்து எச்சரிக்கைக்காக பா.ஜ.க தலைமைக்கு கடிதம் எழுதியிருந்த தகவலும் வெளியாகி இந்த விவகாரத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஒரு வேட்பாளருக்கு பிரதமர் மோடி தெரிந்தே பிரசாரம் செய்திருக்கிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டின் பெண்கள் சக்தியுடன் நிற்போம் என்ற பா.ஜ.க-வின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக இருக்கிறது. கர்நாடகாவில் யாருடைய அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதை காங்கிரஸிடம் கேட்க விரும்புகிறேன்.
காங்கிரஸ் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை. மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் அரசு இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆதரவாக இருக்கிறோம். எங்களின் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்)-ம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறது. இன்று இது தொடர்பான அக்கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று நடக்க இருக்கிறது. அதில் சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs