குறித்த கருத்திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதன் ஒட்டுமொத்த மதிப்பீட்டுச் செலவையும் நிதியுதவியாக வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
குறித்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்கான ஏற்புடைய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக 29.04.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
03. காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்யும் கருத்திட்டம்
இந்திய கடன் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைக்கும் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 2017.05.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கருத்திட்ட முகாமைத்துவ ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக 2019.12.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆலோசனை சேவை வழங்கும் நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்ட மதிப்பீட்டுச் செலவானது, குறித்த கடன் தொகையை விடவும் அதிகரித்தமையால், கருத்திட்டத்தின் செயற்பாடுகளை எதிர்பார்த்தவாறு முற்னெடுத்துச் செல்வதற்கு முடியாமல் போயுள்ளது. அதனால் அரச – தனியார் பங்குடமை பொறிமுறையின் கீழ் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டன. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதன் ஒட்டுமொத்த மதிப்பீட்டுச் செலவையும் நிதியுதவியாக வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்கான ஏற்புடைய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.