செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்து வரும் படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் அவரது வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையில் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அமரன் படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த பட க்குழு, தற்போது செப்டம்பர் மாதம் 27ம் தேதிக்கு ரிலீஸ் செய்தியை மாற்றி வைத்துள்ளார்கள். அதோடு, இதே செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு விஜய்யின் கோட் படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.