சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டம் நாளை (01) காலை 10.00 மணிக்கு கொட்டகலை பொது மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இதில் இணைந்துகொள்ளவுள்ளதுடன், பெருந்தோட்ட மக்கள் பெருந்திரளானோரின் பங்கேற்புடன் இந்த மே தினக் கூட்டமும் பேரணியும் இடம்பெறவுள்ளது.
மலையக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகும்.
இதன் பின்னர் நாளை (01) பிற்பகல் கொழும்பு மாளிகாவத்தை போலீஸுக்கு முன்பாக நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்திலும் ஜனாதிபதி இணைந்து கொள்ள உள்ளார்.