வெளிநாட்டு சந்தையில் இலங்கை இளநீருக்கான கேள்வி அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் நாடளாவிய ரீதியில் 85இற்கும் அதிகமான இளநீர் உற்பத்திக் கிராமங்களை அமைப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச சந்தையில் இளநீருக்கு ஏற்பட்டுள்ள கேள்விக்கு அமைய நாட்டில் இளநீர் செய்கையினை முன்னேற்றுவதற்கு விவசாய அமைத்து விசேட கவனம் செலுத்தியுள்ளது.
இதன் மூலம் நாட்டுக்கு அதிக ஏற்றுமதி வருமானத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.
இதனால் இளநீர் உற்பத்தியாளர்கள் பயனடைவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் இது ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக நாட்டில் 85க்கும் அதிகமான இளநீர் உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய சிறந்த இன இளநீர் கன்றுகள் இக்கிராமங்களில் நடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.