புதிய நிதியாண்டு தொடங்கிவிட்ட நிலையில், கடந்த 2023-24 நிதியாண்டுக்கான இ.பி.எஃப் வட்டித் தொகை எப்போது வரும் எனப் பயனாளிகள் காத்திருக்கின்றனர்.
வட்டித் தொகை எப்போது செலுத்தப்படும் என ஏராளமான பயனாளிகள் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் இ.பி.எஃப்.ஓ (EPFO) நிறுவனத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு இ.பி.எஃப்.ஓ நிறுவனம் அளித்துள்ள பதிலில், “வட்டித் தொகை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் வட்டித் தொகை வந்துவிடும். வட்டித் தொகை சேர்த்து முழுமையாக செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.
2023-24 நிதியாண்டுக்கு இ.பி.எஃப் பயனாளர்களுக்கு 8.25 சதவிகிதம் வட்டி செலுத்தப்படும் என இ.பி.எஃப்.ஓ நிறுவனம் அறிவித்துள்ளது.
முந்தைய ஆண்டில் 8.15 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்ட நிலையில், இப்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
Dear member, Dear member, the process is in pipeline and may be shown there very shortly. Whenever the interest will be credited, it will be accumulated and paid in full.
— EPFO (@socialepfo) April 30, 2024
இ.பி.எஃப் வட்டித் தொகை நம் கணக்கிற்க்கு வந்துவிட்டதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
-
மொபைலில் உமாங் ஆப் (UMANG App) டவுன்லோடு செய்து அதில் தெரிந்துகொள்ளலாம்.
-
https://www.epfindia.gov.in/ இணையதளத்திலும் ‘For Employees’ பிரிவில், ‘Services’ பகுதியில் ‘Member Passbook’ கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
-
9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் முயற்ச்சி செய்து பாருங்களேன்…!