இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. அதற்கான பிரசாரமும் தீவிரமாகியிருக்கிறது. ஆந்திராவில் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், ஆந்திர பிரதேச காங்கிரஸ் (ஏபிசிசி) தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா காக்கிநாடாவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது,“10 வருடங்களாக தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சி செய்து வந்தன. ஆனால், நீண்டகால கோரிக்கையாக ஆந்திர பிரதேசத்துக்கான சிறப்பு அந்தஸ்து இன்னும் பெறமுடியவில்லை. … Read more