49 சுற்றுலாத் தலங்களை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட ஏற்பாடு – சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்டயனா கமகே.

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். சுற்றுலாத்துறையில் இடம்பெறும் மோசடிகளையும், ஊழல்களையும் தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தனியான குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் … Read more

ஆபாச வீடியோ விவகாரம்: “கர்நாடகா அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" – அமித் ஷா

கர்நாடக மாநிலத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், குமாரசாமி தலைமையிலான ஜே.டி(எஸ்) கட்சியின் முக்கிய பிரமுகருமான பிரஜ்வல் ரேவண்ணா பெயரில் பாலியல் வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், பா.ஜ.க முக்கிய நிர்வாகி ஒருவர் கடந்த ஆண்டே இந்த வீடியோ விவகாரம் குறித்து எச்சரிக்கைக்காக பா.ஜ.க தலைமைக்கு கடிதம் எழுதியிருந்த தகவலும் வெளியாகி இந்த விவகாரத்தை … Read more

கோடை ஜாலிக்கு ஊட்டிக்குப் போறீங்களா… இ-பாஸ் வாங்குங்க பாஸ்

மக்கள் கூட்டத்தையும் போக்குவரத்து நெரிசலையும் சமாளிக்கும் வகையில், ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Source link

“உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து

“உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மே தின’ வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்” – என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, … Read more

3-வது கட்ட மக்களவைத் தேர்தலில் 123 பெண்கள் மட்டுமே போட்டி

புதுடெல்லி: மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1,352 வேட்பாளர்களில் 123 பேர் மட்டுமே பெண்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஏடிஆர் வெளியிட்ட அறிக்கை: 3-ம் கட்ட மக்களவை தேர்தல் மே 7-ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் போட்டியிடும் 1,352 வேட்பாளர்களில் 9 சதவீதம் (123 பேர்) மட்டுமே பெண்கள். மேலும், 18 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதனடிப்படையில், 244 வேட்பாளர்களில் 5 பேர் மீது கொலை … Read more

தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழு

Kubera Teaser Release Date: சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடி குரு ஸ்தலத்தில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள்…

மயிலாடுதுறை: நாளை குருப்பெயா்ச்சி விழாவையொட்டி, குரு ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில்  உள்ள குரு ஸ்தலத்தில்,  பக்தர்களின் வசதிக்காக  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நிகழாண்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயா்ச்சி அடைகிறாா். நாளை (மே 1ந்தேதி)   நண்பகல் 12.59 மணிக்கு மேஷ ராசியில் உள்ள கிருத்திகை 1ம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை 2ம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சி பெறும் ஸ்தானத்தை விட, குருவின் 5,7,9 பார்வை … Read more

எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா

ஹிந்தியில் சைத்தான் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, தற்போது ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வந்த ஜோதிகா, தற்போது எவரெஸ்ட் மலை சிகரத்திற்கு டிரக்கிங் சென்றுள்ளார். அது குறித்த ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், எவரெஸ்ட் சிகரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று அடைவது மற்றும் மின்சார வசதி இல்லாத இடங்களில் தங்கி இருப்பது, சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவது, பனிமழையில் நனைவது, உயரமான இடத்தில் அமைந்திருக்கும் … Read more

பருக்களாக இருந்த என் முகம்.. இப்படித்தான் பளபளப்பாச்சு.. அழகின் சீக்ரெட்டை சொன்ன சாய் பல்லவி!

சென்னை: பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த சாய் பல்லவி தெலுங்கில் மாஸ் காட்டி வருகிறார். அழகான க்யூட்டான நடிகையான இவர் தனது பளபளக்கும் சருமத்திற்கான ரகசியத்தை ரசிகர்களிடம் ஷேர் செய்துள்ளார். நடிகை சாய் பல்லவி தனுஷுடன்

மதவெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: அண்ணாமலைக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை நீட்டிப்பு

புதுடெல்லி, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, அண்ணாமலைக்கு சேலம் கோர்ட்டு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் அண்ணாமலை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு … Read more