சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜனதாவின் கைக்கூலிகள் – ஒய்.எஸ்.சர்மிளா

காக்கிநாடா, ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அங்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா-தெலுங்குதேசம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என மும்முனைப்போட்டி நிலவுகிறது. மாநில காங்கிரசுக்கு சமீபத்தில் தலைவராகி உள்ள முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய … Read more

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; ஜன்னிக் சினெர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 34 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான இத்தாலியின் ஜன்னிக் சினெர், ரஷியாவின் பாவெல் கோடோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட சினெர் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் பாவெல் கோடோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16 சுற்று) முன்னேறினார். இன்று … Read more

கென்யாவில் அணை உடைந்து விபத்து: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்-40 பேர் பலியான சோகம்

நைரோபி, கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தலைநகர் நைரோபி வெள்ளத்தில் மிதக்கிறது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளதால் கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். இதனிடையே, கென்யாவில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் அணை வெள்ளத்தில் சேதம் அடைந்தது. தடுப்புச்சுவர் உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நீர் புகுந்தது. … Read more

`வெள்ள நிவாரண நிதி பகிர்விலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதா?' – ஒன்றிணைந்த தமிழகத் தலைவர்கள்!

பல மாதங்களாக தமிழ்நாடு அரசு கோரிவந்த வெள்ள நிவாரண நிதியை ஒரு வழியாக மத்திய அரசு விடுவித்திருக்கிறது. அதிலும், மாநில அரசு கேட்டதைவிட மிக மிகக் குறைவானத் தொகையை ஒதுக்கி தமிழ்நாட்டை மத்திய பா.ஜ.க அரசு வஞ்சித்துவிட்டதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார்கள். மோடி – அமித்ஷா தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை: கடந்த டிசம்பர் மாதம் அடித்த `மிக்ஜாம்’ புயல் மழையால் தமிழ்நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக, மிக்ஜாம் புயலால் … Read more

வட தமிழகத்தில் மே 3-ம் தேதி வரை 9 டிகிரி வெப்பநிலை உயரும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம், அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களின் இன்றும், நாளையும் சமவெளிப் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், மே 2, 3-ம் தேதிகளில் 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் அதிகரிக்கக்கூடும். மே 2, … Read more

2-வது நாள் சோதனையில் குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

புதுடெல்லி: குஜராத் கடல் பகுதியில் 2-வது நாளாக மீன்பிடி படகில் கடத்தி வரப்பட்ட 173 கிலோ போதைப்பொருளை இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானிலிருந்து அரபிக் கடல் எல்லை வழியாக (குஜராத்) மீன் பிடி படகு மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருளை கடத்தும் முயற்சி தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுக்க, இந்திய கடலோர காவல் படை (ஐசிஜி) போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), குஜராத் தீவிரவாத … Read more

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்பு காலிஸ்தான் ஆதரவு கோஷம்

புதுடெல்லி: கனடாவில் சீக்கிய மத நிறுவன நாள் கொண்டாட்டத்தின்போது அந்நாட்டு பிரதமர் முன்னிலையில் காலிஸ்தானுக்கு ஆதரவாக சீக்கியர்கள் முழக்கம் எழுப்பினர். கடந்த 1699-ம் ஆண்டு சீக்கிய மதம் நிறுவப்பட்டது. இந்த நாள் சீக்கிய புத்தாண்டாக (வைசாகி) ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் வைசாகி கடந்த 13-ம் தேதி கொண்டாடப்பட்டது. சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு கனடாவின் டொரன்ட்டோ நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆன்டாரியோ சீக்கியர்கள் மற்றும் குருத்வாரா கவுன்சில் (ஓஎஸ்ஜிசி) சார்பில் ஆண்டுதோறும் … Read more

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாதா? தெளிவான தகவல் இல்லை என்று புகார்!

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் PRESS, MEDIA, ஊடகம் என்று அடையாளப் பதிவுக்கு தடையா? தெளிவுப்படுத்தவும் முறைப்படுத்தவும் சென்னை பெரு நகர காவல் துறைக்கு  சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!  

உலக கோப்பை அணியில் ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல்? தேர்வுக்குழு எடுத்த முடிவு?

T20 World Cup squad: டி20 உலக கோப்பைக்கான அணி எப்போது வெளியாகும் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பமான அணியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் சிலரது பதிவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்வதில் தேர்வாளர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர். ஒரு சில சீனியர் வீரர்களின் தற்போதைய பார்ம் கவலை அளிப்பதாக பிசிசிஐ … Read more

பொய்களை மட்டுமே பேசும் மோடி : மல்லிகார்ஜுன கார்கே

சேடம் நகர் பிரத்மர் மோடி பொய்களைமட்டுமே பேசுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். வரும் 7 ஆம் தேதி கர்நாடகாவி 2ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே வட கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளில் கொளுத்தும் வெயிலில் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். நேற்றி கலபுரகி தொகுதிக்கு உட்பட்ட சேடம் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தோ்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் … Read more