வானிலை முன்னெச்சரிக்கை: மே 3 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை

சென்னை: அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றம் இருக்காது என்றும், மே 3 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் … Read more

வேட்புமனுவை வாபஸ் பெற்றார் இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜகவில் இணைய அழைப்பு

இந்தூர்: காங்கிரஸ் கட்சியின் இந்தூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அக்‌ஷய் காண்டி பாம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இவர் இந்தூர் தொகுதியில் தற்போதைய பாஜக எம்.பி. சங்கர் லால்வானிக்கு எதிராக களமிறக்கப்பட்டிருந்தார். இந்தூரில் வரும் மே 13-ஆம் தேதி மக்களவை 4-ஆம் கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணிக்கு பேரதிர்ச்சியாக வந்துள்ளது. அக்‌ஷய் காண்டி பாம் தனது மனுவை வாபஸ் பெற்றவுடனேயே … Read more

இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

டில்லி இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 19 ஆம் தேதியும், 2 ஆம் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதியும் நடைபெற்றது., வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதி கடைசி கட்டமான 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி … Read more

நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பின்னர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பம், வழக்கு போன்றவற்றால் கட்டட பணிகள் பாதியில் நின்றன. சமீபத்தில் இந்த பணிகள் மீண்டும் துவங்கி உள்ளன. இதற்கு நிதி திரட்டும் பணிகளும் நடக்கின்றன. நடிகர்கள் கமல், உதயநிதி, விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி வழங்கினர். சிவகார்த்திகேயன் 50 லட்சம் கொடுத்துள்ளார். இப்போது நடிகரும், சங்கத்தின் முன்னாள் துணை தலைவருமான நெப்போலியன் தன் பங்கிற்கு ரூ.1 … Read more

Rasavathi: சண்டையில் சாகுறதுதான் வீரம்.. வெளியானது அர்ஜூன் தாஸின் ரசவாதி பட ட்ரெயிலர்!

சென்னை: நடிகர் அர்ஜுன் தாஸ் கைதி படம் மூலம் சிறப்பான வரவேற்பை பெற்று தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி அநீதி படம் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தவர். இந்நிலையில் தற்போது மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள சூழலில் வரும்

இனிமே வாகனங்கள்ல இந்த மாதிரி ஸ்டிக்கர் இருந்தா, `சட்டம் தன் கடமையைச் செய்யும்' பணம் பத்திரம் மக்கா!

`தனியார் கார்கள் பைக்குகள் உள்ளிட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால், வரும் மே 2-ம் தேதி முதல், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்களை மாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டியிருக்கும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை வாடகை சைக்கிளுக்குப் போராடியவள், இன்று சிட்டி ரோட்டில் … Read more

‘ஸ்டராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் பழுதின்றி செயல்பட நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு

சென்னை: ‘தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழுதுமின்றி முழுமையாக இயங்க வேண்டும். ‘ஸ்ட்ராங் ரூம்’ அமைந்துள்ள பகுதிகளில் டிரோன் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார். … Read more

“பொய்மையே வெல்லும் என்பதுதான் மோடியின் கொள்கை” – ஜெய்ராம் ரமேஷ் சாடல்

புதுடெல்லி: “பொய்மையே வெல்லும் என்பதுதான் பிரதமர் மோடியின் கொள்கை” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். பிரதமர் மோடி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி விமர்சித்திருந்ததற்கு ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். “பிரதமர் மோடி பொய்களைப் பரப்பி வருகிறார். ஆட்சிப் பீடத்தில் இருந்து வெளியேற உள்ள பிரதமர் மோடி காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பற்றி அப்பட்டமான, பொய்யை சற்றும் வெட்கப்படாமல் கூறி வருகிறார். அவர் ஒவ்வொரு முறை … Read more

குன்னூர் பிரபல ஹோட்டல் சாசில் இருந்த புழுக்கள்! சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை பிரபல ஹோட்டலில் வழங்கிய சாசில் புழுக்கள் இருந்தால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலில் ஆய்வு செய்தனர்.   

IPL 2024 DC vs KKR : கொல்கத்தா வெற்றி, டெல்லி தோல்வி! பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?

டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதல் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 47வது ஐபிஎல் 2024 சீசன் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் அதிரடியில் அந்த அணி 154 ரன்கள் என்ற இலக்கை 16.3 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்தது. இதனால், 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்றிருக்கும் அந்த அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 11 ஆட்டத்தில் … Read more