Virat Kohli: `ஐபிஎல் வரலாற்றில் மெதுவான சதம் அடித்த வீரர்!' – விராட் கோலி பற்றி வைரலாகும் ட்ரோல்கள்

ஐபிஎல்: பெங்களூரு – ராஜஸ்தான் இடையேயான நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கு183 ரன்களை எடுத்திருந்தது. இதில் விராட் கோலி கடைசிவரை களத்தில் நின்று 72 பந்துகளில் 113 ரன்களை குவித்திருந்தார். இருப்பினும், சேஸிங்கில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் 1 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருக்க 19.1வது பந்தில் 94 ரன்களில் இருந்த பட்லர் சிக்ஸர் அடித்து தனது சதத்தை நிறைவு செய்து ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதிசெய்தார். விராட் கோலியை … Read more

‘‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமானதே’’: செல்வப்பெருந்தகை

சென்னை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமானதே என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், நடைமுறை சாத்தியமற்றது என்றும் பா.ஜ.க. விமர்சனம் செய்திருக்கிறது. 2014 மக்களவை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக, 10 ஆண்டுகாலம் மக்கள் விரோத ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது. கடந்த 2019 ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் … Read more

ரயிலில் மீண்டும் மூத்தகுடிகளுக்கு சலுகை: காங்கிரஸ் வாக்குறுதியும் பின்புலமும்

புதுடெல்லி: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரயிலில் மீண்டும் மூத்தகுடிகளுக்கு சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. கடந்த பல வருடங்களாக ரயிலில் மூத்தகுடிகளுக்கு கட்டணங்களில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. கரோனா பரவலை காரணமாக்கி பாஜக தலைமையிலான அரசு அதை ரத்து செய்தது. நாடு முழுவதிலும் ஓடும் ரயில்களில் ஆண்டுதோறும் சுமார் 800 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். இவர்களில், ஆண், பெண் என மூத்தகுடிமக்களில் இருபாலர்களுக்குமான ரயில் கட்டண சலுகை … Read more

ஹாட் ஸ்பாட் திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்

ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது.

’அதிமுகவில் ஒரு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி’ அமைச்சர் உதயநிதியை ஒருமையில் பேசிய நிர்மலா பெரியசாமி

Nirmala Periyasamy criticizes minister Udayanidhi Stalin: ஓசூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுகவின் நிர்மலா பெரியசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் ஏக வசனத்துக்கு சர்ச்சையாக பேசியுள்ளார்.

OPPO 256 ஜிபி ஸ்மார்ட்போன்! புதிய மாடல் – விலையை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க

OPPO F25 Pro 5G லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மொபைலின் அனைத்து கலர் மொபைல்களையும் ஒரே விலையில் வாங்க முடியும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.23,999 மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.25,999 ஆகும். அண்மையில், Oppo சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் F25 Pro 5G ஐ அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் இந்த போனை புதிய … Read more

ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் விழித்துக் கொள்ள வேண்டும் : பிரேமலதா

சென்னை சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.  வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் தலா ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப்போட்டி நிலவுகிறது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, தொகுதி வாரியாக சென்று தேர்தல் பிரசாரங்களில், பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள் நேற்று தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து … Read more

கோட் படத்திற்காக விஜய்யுடன் இணைந்து பாடிய வெங்கட் பிரபு

விஜய் நடிக்கும் கோட் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, பெரும்பாலான படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பை நடத்துவதற்காக துபாய் சென்றுள்ளார். விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலை வெங்கட்பிரபுவும் பின்னணி பாடியிருக்கிறார். இந்த பாடல்தான் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகும் என்கிறார்கள். மேலும் இளையராஜா இசையில் … Read more

அவ எனக்கு பொண்ணு இல்ல அம்மா.. கமலா காமேஷ் உருக்கமான பேட்டி!

சென்னை: மூத்த நடிகையான கமலா காமேஷ், 80 மற்றும் 90களில் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர். 14 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். அண்மையில் இவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது மகள் உமா ரியாஸ் கான் குறித்து பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார். ஜெயபாரதி இயக்கத்தில் வெளியான

இலங்கைக்கான பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியம் புதுப்பித்தது

இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) 2024 ஏப்ரல் 05 முதல் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், நாட்டிற்குள் நுழையும் போது பாதுகாப்புத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் ஆகிய பகுதிகளில் முந்தைய தகவல்களைப் புதுப்பித்துள்ளது. அதன்படி, உணவு, எரிபொருள் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு குறித்து முந்தைய ஆலோசனையில் … Read more