100 சதவீத வாக்குப்பதிவு: மலையேற்றம், மனித சங்கிலி….பொதுமக்களை கவர்ந்த நூதன விழிப்புணர்வு முறைகள்

Lok Sabha Elections: மக்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி 400 மீட்டர்  உயரம் கொண்ட ஒத்தக்கடை யானைமலை மேல் மலையேற்றம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட தேர்தல் அலுவலர்.

பாண்டியா இல்லாத நேரம் பார்த்து மும்பை அணியுடன் இணைந்த சூர்யகுமார்! ரோகித் ரியாக்ஷன்

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. ஏப்ரல் 7 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டலஸ் அணிக்கு எதிராக நான்காவது போட்டியில் விளையாட இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது மும்பை அணி. குட்நியூஸாக காயத்தில் இருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க இருக்கிறார். இதில் கவனிக்க … Read more

4 நாட்கள் அனுமதி: இன்று சனிபிரதோஷம் – சதுரகிரி கோவிலில் குவியும் பக்தர்கள் ….

விருதுநகர்: சதுரகிரி கோவிலில்  சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை காரணமாக, நான்கு நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை  பிரசித்தி பெற்ற சனி பிரதோஷம் என்பதால், இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க குவிந்து வருகின்றனர். இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது,. பிரதோஷ நாட்களில் சிறந்தது சனிப் பிரதோஷம் என நம்பப்படுகிறது. சனி பிரதோஷத்தன்று விரதம் இருந்தால் சனியின் தீய பாதிப்புக்களில் இருந்து விடுபட … Read more

படம் இயக்க தயாராகிறார் ஹரியின் மகன்

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஹரி. சாமி, சிங்கம் படங்களின் மூலம் புகழ் பெற்றவர். அருண் விஜய் நடிப்பில் 'யானை' படத்தை இயக்கியவர் தற்போது விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான ப்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஸ்ரீராம் ஹரி தந்தையை போலவே சினிமா இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். அதற்கான பயிற்சி எடுத்து வந்தார். இந்த நிலையில் அவா 'ஹம்' என்ற … Read more

தம்பி சண்முக பாண்டியனுக்கு பிறந்தநாள் பரிசு.. அண்ணன் விஜய பிரபாகரன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்!

சென்னை: நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமான சூழலில் அவரது சமாதிக்கு தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வந்தவண்ணம் உள்ளனர். சமீபத்தில் திருமணம் முடித்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மற்றும் கார்த்திக் குடும்பத்தினருடன் சமாதியில் சென்று ஆசி பெற்றனர். இந்நிலையில் இன்றைய தினம் விஜயகாந்தின்

"முடக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்குகள்…" – வருமான வரித்துறை அதிரடி

திருச்சூர், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு வங்கியில், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தனித்தனியாக 5 கணக்குகள் உள்ளன. இந்த கணக்குகளில், கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் முறைகேடு செய்த ரூ.3.80 கோடி இருப்பதாகவும், பலமுறை வங்கி கணக்குகளில் பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது. அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த வங்கியில் நேற்று முன்தினம் திடீரென சோதனை நடத்தினர். 5 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் மதியம் முதல் நள்ளிரவு வரை சோதனை … Read more

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஆக்கி போட்டி இன்று நடக்கிறது

பெர்த், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது போட்டி பெர்த்தில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அணி திணறியது. முடிவில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய … Read more

நைஜீரியா: மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 25 பேர் பலி

அபுஜா, நைஜீரியாவின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த கோகி மாகாணத்தில் ஓமலா பகுதியில் அகோஜிஜு-ஓடோ சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஆயுதமேந்திய மர்ம நபர்கள் திடீரென அந்த சமூக மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் புகுந்து அதிரடியாக எல்லோரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி சமூக தலைவரான எலியாஸ் அடாபோர் கூறும்போது, சமீபத்தில் இந்த பகுதியில் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதில், … Read more

இந்தியாவில் லெக்சஸ் NX 350h Overtrail எடிசன் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் லெக்சஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள NX 350h Overtrail எடிசன் புதிய மாடல் விலை ரூபாய் 71.77 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான ஸ்போட்டிவ் மற்றும் மிகவும் முரட்டுத்தனமாக அமைந்திருக்கின்றது. Lexus NX 350h ஓவர்ட்ரெயில் எடிசன் ஆனது சிறப்பு மூன் டெசர்ட் நிறத்தை பெறுகின்றது மிகவும் யூனிக்கான இந்த நிறத்துடன் கருமை நிறத்தை பெற்ற கிரில், ரூஃப் ரெயில், கதவு கண்ணாடிகள் மற்றும் கதவு கைப்பிடிகள். போன்றவற்றில் அமைந்திருக்கின்றது. Tazuna காக்பிட் பெறுகின்ற என்எக்ஸ் … Read more

அரசாங்க வேலைத்திட்டத்தை முன்னோக்கி நகர்த்தி நாட்டை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

• கோஷங்களுக்கும் வாக்குவாதங்களுக்கும் அடிபணிந்து நாட்டின் எதிர்காலத்தை மறந்துவிடக் கூடாது – “என்னில் இருந்து ஆரம்பிப்போம்” அநுராதபுரம் மாவட்ட இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. நவீன விவசாயம், சுற்றுலா மற்றும் வலுசக்தித் துறைகளில் பரிவர்த்தனை ரீதியிலான மாற்றத்துடன் 2048 ஆம் ஆண்டளவில் வளமான இலங்கையை கட்டியெழுப்பும் பயணத்தை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்தப் பயணத்துடன் முன்னோக்கிச் சென்று நாட்டை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, கோஷங்களிலும் … Read more