பறக்கும் படை சோதனையில் ரூ.21 கோடி தங்க நகைகள் பறிமுதல் @ கிருஷ்ணகிரி

ஓசூர் / கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு இடங்களில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓசூர் ஜூஜுவாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்தழகு தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 69 பெட்டிகளில் ரூ.15.12 கோடி மதிப்பிலான … Read more

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் 18-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி துணை முதல்வராக இருந்தமணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது. இதில் மதுபான விற்பனையாளர்களுக்கு உரிம கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனடைந்த மது விற்பனையாளர்கள் அதிகாரிகள் பலருக்கு லஞ்சம் வழங்கியுள்ளனர் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளன. இந்த வழக்கில் ஆம் ஆத்மி மூத்ததலைவர் சஞ்சய் சிங் சமீபத்தில்ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அவர் … Read more

ரஜினி, கமல் to விஜய், அஜித்-பொது இடத்தில் கோபப்பட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள்!

திரை பிரபலங்கள் பலர், பொது இடத்தில் தங்களையும் மீறி பல சமயங்களில் கோபப்பட்டிருக்கின்றனர். அந்த சம்பவங்களையும், அவர்கள் கோபப்பட்டதற்கான காரணங்களையும் இங்கு பார்க்கலாம்.  

கோவையில் ஐடி ரெய்டு… மருத்துவமனை ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம் – பின்னணி என்ன?

Coimbatore IT Raid News: கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், அங்கிருந்த ரகசிய அறையில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சோம்நாத் கோயிலில் பாண்டியா வைத்த வேண்டுதல்! மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறுமா?

மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி மும்பையில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. பாண்டியா சிறப்பு பூஜை இந்தப் போட்டிக்கு முன்னதாக … Read more

ஜியோ ஃபைபர் மெகா ஜாக்பாட்! 1000ஜிபி டேட்டா, 15க்கும் மேற்பட்ட OTTகள் 50 நாட்கள் இலவசம்

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சேவையான ஜியோ ஏர்ஃபைபர் 136 புதிய நகரங்களை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை இது 5352 நகரங்களில் கிடைத்தது. ஆனால் இப்போது 5488 நகரங்களின் பயனர்கள் ஜியோ ஏர் ஃபைபரை பெற்றுக்கொள்ள முடியும். ஜியோ ஏர் ஃபைபர் எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த நகரங்களை அடைந்துள்ளது என்ற தகவல் வேண்டும் என்றால், ஜியோ இணைய பக்கத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் பெறலாம். ஜியோ ஏர் ஃபைபரின் சிறப்பு என்னவென்றால், ஃபைபர் சேவை … Read more

போராடிய ஆசிரியர்களுக்கு ‘சம்பளம் பிடித்தம் கிடையாது’! தேர்தலால் பின்வாங்கியது தமிழக அரசு…

மதுரை:  சமவேலைக்கு சம ஊதியம் என திமுக அரசின் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அரசுக்கு எதிராக போராடிய ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களின் அதிருப்தி காரணமாக,  சம்பளம் பிடித்தம் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் 13 நாட்களில் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் ஆசிரியர்களே பெருமளவு ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் 19 … Read more

அப்பாவிடம் ஏமாற்றி பணம் வாங்கி படம் தயாரித்தேன்: இயக்குனர் உருக்கம்

விநாயக் துரை என்ற புதுமுகம் தயாரித்து, இயக்கி உள்ள ஹைபர்லிங்க் படம் 'வல்லவன் வகுத்ததடா'. வரும் 11ம் தேதி வெளிவருகிறது. தனஞ்செயன் வெளியிடுகிறார். இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார், சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார். படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குனரும், தயாரிப்பாளருமான விநாயக் துரை பேசியதாவது : 2 வருட போராட்டம் … Read more

Pradeep: பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு கூட்டணியில் வெளியான கோமாளி படம் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார் பிரதீப் ரங்கநாதன். கோமாவில் சில ஆண்டுகள் இருக்கும் படத்தின் ஹீரோ மீண்டும் நினைவு திரும்பிய நிலையில் அவர் எதிர்கொள்ளும் வாழ்க்கை சிக்கல்களை மையமாகக் கொண்டு இந்த படம் காமெடி தூக்கலாக உருவாகியிருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து லவ்

'தேர்தல் பத்திரங்கள் உலகின் மிகப்பெரிய ஊழல்' – மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஐதராபாத், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். அவர் பேசும்போது, ‘மத்திய அரசின் தேர்தல் பத்திரம் திட்டம்தான் உலகிலேயே மிகப்பெரிய ஊழல். இந்தியாவில் நாள்தோறும் சுமார் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களது வேளாண் கடன்களில் ஒரு ரூபாயை கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி அளவிலான கடன்களை … Read more