விமல் நடிக்கும் மா.பொ.சி படத்தின் போஸ்டர் வெளியீடு

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், மா.பொ.சி என்ற படத்தை தனது நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறார். கன்னி மாடம் என்ற படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட் இயக்கும் இந்த படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். தற்போது மா.பொ.சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் சாக்பீசால் எழுதிக் கொண்டிருக்கிறார் விமல். இதை வைத்து பார்க்கும் போது அவர் படத்தில் ஆசிரியராக நடிப்பது தெரிகிறது. அதோடு அவரது … Read more

Shivani Narayanan: யம்மாடியோவ்.. பிக் பாஸ் ஷிவானியா இது?.. அடுத்த படத்தில் அவருக்கு இதுதான் ரோலா?

சென்னை: நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஷிவானி நாராயணன் தொடர்ந்து ஜிம்மில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது பாக்ஸிங் கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் நம்ம ஷிவானியா இது என ஆச்சர்யத்தில் வாய் பிளந்துள்ளனர். விஜய் டிவி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகையான ஷிவானி நாராயணனுக்கு பிக்

மது அருந்திவிட்டு பணியாற்றிய பள்ளி தலைமையாசிரியர் பணி நீக்கம் @ தருமபுரி

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு பணியாற்றிய அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். தருமபுரி ஒன்றியம் மாரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக குணசேகரன்(57) என்பவர் பணியாற்றி வந்தார். இப்பள்ளிக்கு அண்மையில் மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி) மான்விழி பள்ளிப்பார்வை நிகழ்வுக்காக சென்றிருந்தார். அப்போது அப்பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் மது அருந்திவிட்டு பணியாற்றியது தெரிய வந்தது. எனவே, அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ சான்று பெறப்பட்டது. மேலும், அவர் … Read more

“அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பவில்லை என பிரதமர் மோடி அறிவிப்பாரா?” – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி: “அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பவில்லை என பிரதமர் மோடி தெளிவுபடுத்துவாரா?” என காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். அந்த தொகுதியின் தற்போதைய எம்பி தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பிரதமர் தனது வழக்கமான பிரசாரத்தை இங்கு தொடர்கிறார் என்றாலும், இந்தியாவின் ஜனநாயகம் தொடர்பாக … Read more

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு : பாஜக நிர்வாகியிடம் என் ஐ ஏ விசாரணை

பெங்களூரு பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகியிடம் என் ஐ ஏ தீவிர விசாரணை செய்து வருகிறது கடந்த மார்ச் 1 ஆம் தேதி கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில் 9 பேர் காயமடைந்தனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., தீவிரமாக விசாரித்து வருகிறது. என்  ஐ ஏ இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து., தீவிர விசாரணை நடத்தி … Read more

ஒரு ஊரில் 500 பெண்களுக்கு ரூ.1000 கிடைத்தால் என்ன அர்த்தம்? கிராம பொருளாதாரத்தில் புரட்சி: ஸ்டாலின்

சென்னை: ஒரு கிராமத்தில் 500 பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வருகிறது என்றால் அந்த ஊருக்குள் ஐந்து லட்சம் ரூபாய் வருகிறது என்று பொருள். மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் வாழ்வில் மட்டுமல்ல, கிராமப்புறப் பொருளாதாரத்திலும் ஒரு மிகப்பெரிய புரட்சித் திட்டம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான Source Link

ரத்னம் பற்றி இயக்குனர் ஹரி வெளியிட்ட தகவல்

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பின் விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ரத்னம். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், ரத்னம் படத்தின் கதை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஹரி. அதில், நாட்டில் 60 சதவீத பேர் கெட்டவர்கள், … Read more

Ajith: தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் விடாமுயற்சி.. அஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. அஜித்தின் கார் சேஸிங் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டன. இதில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்டவர்களும் இணைந்திருந்தனர். இந்நிலையில் அசர்பைஜானில் தொடர்ந்து சூட்டிங் நடத்த உகந்த காலச்சூழல் இல்லாத காரணத்தையடுத்து அந்த சூட்டிங்கை

`ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகி கைது' – காங்கிரஸ் குற்றச்சாட்டு; NIA மறுப்பு!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில், கடந்த மார்ச் 1-ம் தேதி ராமேஸ்வரம் கஃபே (Rameshwaram Cafe) உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே, `தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவைத்தனர்’ என்று மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பரபரப்பை ஏற்படுத்தினார். ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு இதற்குத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து பா.ஜ.க-வுக்கு எதிராகக் கண்டனங்கள் எழ, … Read more

“பாஜகவுக்கு ராமதாஸ் பல்லக்கு தூக்குகிறார்” – முதல்வர் ஸ்டாலின் சாடல் @ விழுப்புரம் 

விழுப்புரம்: “சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லும் கட்சி, பாஜக. அந்தக் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது யார்? மருத்துவர் ராமதாஸ். இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் ரகசியம் அவருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறார். ஆனால், அவரைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று விழுப்பரத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 5) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் விழுப்புரம் … Read more