செய்தித் தெறிப்புகள் @ ஏப்.5: காங். தேர்தல் அறிக்கை அம்சங்கள் முதல் தமிழகத்தில் ஐடி ரெய்டு வரை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2024 – முக்கிய வாக்குறுதிகள்: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். இந்நிகழ்வில் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீதி என்பதை முன்னிறுத்தி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்; NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்; குடும்பத்தில் ஒரு … Read more

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக பதிவு

டிரென்டன்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் (வெள்ளிக்கிழமை, ஏப்.5) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் இதனை உணர்ந்துள்ளனர். இதை அமெரிக்க நாட்டின் புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 10.23 மணி அளவில் லெபனான் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்துக்கு 45 மைல் மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இதுவரை பதிவு ஆகவில்லை என நியூயார்க் நகரின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது. களத்தில் … Read more

SRH vs CSK: கேட்சைவிட்டு மேட்சையும் கோட்டைவிட்ட சிஎஸ்கே… ஹைதராபாத் அபார வெற்றி!

SRH vs CSK Match Highlights: 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தற்போது குறைந்தபட்சம் 3 போட்டிகள் விளையாடிவிட்ட நிலையில் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானது என்றாலும் இன்றைய லீக் போட்டி சற்று கூடுதல் முக்கியத்துவம் பெற்றது எனலாம்.  கடந்த சில நாள்களுக்கு முன் 5 முறை கோப்பையை வென்று, தற்போது பலமுடன் இருக்கும் மும்பை … Read more

நீதித்துறை குறித்த காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள்

புதுடில்லி இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.  இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் நீதித்துறை குறித்த வாக்குறுதிகள் பின்வருமாறு:- உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகளை நியமிக்கத் தேசிய நீதித்துறை ஆணையம் அமைத்தல் இன்னும் மூன்று வருடங்களில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் உள்ள அனைத்துப் பணி இடங்களையும் நிரப்புதல் உச்சநீதிமன்றத்தை மேல் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் சட்டப்பூர்வ நீதிமன்றம் என இரண்டாகப் … Read more

6 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகி அதன்பிறகு இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். தற்போது அவர் நடித்து இசையமைத்துள்ள கள்வன் என்ற படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவானா நடிக்க, பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனுஷ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரிடத்தில் 6 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக தெரிவித்திருக்கிறார். நாங்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்ததால் இது போன்ற சண்டை … Read more

Indru netru naalai 2: இன்று நேற்று நாளை 2 & பீட்சா 4 படங்களின் பூஜை… அறிவித்த தயாரிப்பாளர்!

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம் இன்று நேற்று நாளை. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய ஹீட்டை கொடுத்தது. டைம் மிஷினை மையமாக வைத்து இந்த படத்தின் கதைகளம் உருவாக்கப்பட்டிருந்தது. தன்னுடைய சிறப்பான திரைக்கதையால் இந்த படத்திற்கு

அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்திய சாதகமான சூழல் காரணமாக இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

வலுவான பொருளாதாரத்துடன், நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழல் இன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை மேலும் வலுப்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை பெற எதிர்பார்க்கிறோம்- ஜனாதிபதி. கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் தொங்குபாலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை … Read more

திண்டுக்கல்: காதலர்களைக் கட்டிப்போட்ட கும்பல்; சகோதரிகளுக்கு நேர்ந்த கொடுமை… போலீஸ் நடவடிக்கை!

திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 19,17,13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இதில் 19 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 19, 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. 19 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் இருவரும் தங்களது காதலர்களுடன் கடந்த மார்ச் 30, இடையகோட்டையில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்கு … Read more

“பிரதமர் மோடி நடிகரை போல் வலம் வருகிறார்” – வாகை சந்திரசேகர் பேச்சு @ சிவகாசி

சிவகாசி: “300 படங்களுக்கு மேல் நடித்த நான் திமுக தொண்டனாக உங்கள் முன் நிற்கிறேன். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நடிகர் போல் வலம் வந்து கொண்டிருக்கிறார்” என சிவகாசியில் நடிகர் வாகை சந்திரசேகர் பேசினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவரான நடிகர் வாகை சந்திரசேகர், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து சிவகாசி கந்தபுரம் காலனியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த மக்களவை தேர்தல் மிக … Read more

திஹார் சிறையில் கவிதாவிடம் விசாரணை நடத்த சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல் கட்ட விசாரணையை மத்திய புலனாய்வு முகமை தொடங்கியுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக கவிதாவை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மனு … Read more