கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது – இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

கொழும்பு, கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பேசுபொருளாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரசும், தி.மு.க.வும்தான் காரணம் என்று பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன என பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. இதனிடையே கச்சத்தீவை மீட்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் … Read more

மக்கள் நலத் திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளைப் போலவே அரசாங்க அதிகாரிகளையும் சார்ந்துள்ளது 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும, உறுமய, மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட வேலைத் திட்டங்களின் பலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட உறுமய, அஸ்வெசும மற்றும் மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரைத் தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி … Read more

புது வகை மோசடி: ஸ்விகி கஸ்டமர் சர்விஸ் போல பேசிய கும்பல்… ரூ.3 லட்சத்தை இழந்த முதியவர்!

65 வயதான முதியவர் ஒருவர், மலேசியாவிலிருந்து டெல்லி வந்திருக்கிறார். டெல்லி வந்த அவர் ஸ்விகி உணவு டெலிவரி ஆஃப்-இல் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். பல மணி நேரம் ஆகியும் உணவு டெலிவரி ஆகாததால் விரக்தி அடைந்த அவர், ஸ்விகி வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ள முடிவு செய்திருக்கிறார். இதனால் கூகுளில் சென்று ஸ்விகி கால் சென்டர் என தேடி திரையில் காணப்பட்ட தொலைபேசி எண்ணை அழைத்து நடந்தவற்றைக் கூறியிருக்கிறார். அப்பொழுது தொலைபேசியில் எதிரே பேசிய நபர் அவரது … Read more

இவிஎம் குறைபாடுகளை களைய உத்தரவிட கோரிய திமுக வழக்கு: ஜூன் 25-க்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், மூன்றாம் தலைமுறை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இந்த இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்க … Read more

“விரைவில் சந்திப்போம்” – திகார் சிறையிலிருந்து தொகுதி மக்களுக்கு மணீஷ் சிசோடியா கடிதம்!

புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திகார் சிறையிலிருந்து தனது சட்டமன்றத் தொகுதியான பட்பர்கஞ்ச் தொகுதி மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் சிபிஐ, மணீஷ் சிசோடியாவை கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்தது. இந்நிலையில், திகார் சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா தனது … Read more

தன்னை விட 12 வயது மூத்த நடிகரை காதலித்த ராஷ்மிகா! அந்த பிரபல நடிகர் யார் தெரியுமா?

Actress Rashmika Mandanna Relationship : பிரபல நடிகை ராஷ்மிகா மந்தான், தன்னை விட வயதில் 12 வயது மூத்தவரை திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால், அவரது இந்த காதல் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது.  

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 29 இடங்களில் வெற்றிபெறும்! டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு

சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 29 இடங்களில் வெற்றிக்கனியை பறிக்கும் என டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் தொடர்ந்து 5வது முறையாக அதே கூட்டணியை திமுக அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீக் லீக் ஆகிய கட்சிகள் … Read more

'எனது ஸ்டார்' : அப்பா பற்றி விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி

தெலுங்கு சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படம் இன்று திரைக்கு வந்துள்ளது. தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகும் இப்படத்திற்காக சென்னை வந்து கூட புரமோஷன் செய்தார் விஜய் தேவரகொண்டா. இப்படத்திற்காக சமூக வலைத்தளங்களிலும் தனியாக பதிவிட்டு வருகிறார். நேற்று 'எனது ஸ்டார்' என அவரது அப்பா பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டு, சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். “வாழ்க்கை என்பது முழுவதுமாக மேடுகளும் பள்ளங்களும் நிறைந்தது. ஆனால், … Read more

The Family Star Review: தி ஃபேமிலி ஸ்டார் விமர்சனம்.. காட்டு மொக்கை.. வேஸ்ட் பண்ண விஜய் தேவரகொண்டா!

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர்இசை: கோபி சுந்தர்நேரம்: 2h 35mஇயக்கம்: பரசுராம் சென்னை: அறிமுக இயக்குநர்களை நம்பி படம் பண்ண மாட்டேன் என பயந்து நடுங்கும் விஜய் தேவரகொண்டா கீதா கோவிந்தம் படத்தை தனக்கு கொடுத்த இயக்குநர் பரசுராமை நம்பி மோசம் போன கதை தான் இந்த ஃபேமிலி ஸ்டார். மகேஷ் பாபு, கீர்த்தி

ஆழ்துளை கிணற்றுக்குள் தலைகீழாக விழுந்த குழந்தையை உயிருடன் மீட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் இன்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் வீட்டின் அருகே நின்று விளையாடிய குழந்தை சாத்விக் திடீரென்று காணாமல் போய் விட்டது. இதையடுத்து, தனது குழந்தையை பூஜா தேடினார். அப்போது தான் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்திருப்பது தெரியவந்தது. அதாவது பூஜா டார்ச் லைட்டை … Read more