அவரை போன்ற வீரரை கழற்றிவிட்டால் எப்படி வெற்றிபெற முடியும்..? – ஆர்.சி.பி மீது வாட்சன் அதிருப்தி

மும்பை, 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள 17 லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்க்கதா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. கோலி, டு பிளெஸ்சிஸ், மேக்ஸ்வெல், க்ரீன், தினேஷ் கார்த்திக், சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களை கொண்ட பெங்களூரு அணி இதுவரை 4 … Read more

வெனிசுலாவில் உலகின் மிக வயதான மனிதர் ஜுவான் மரணம்

கராகஸ், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் டச்சிரா மாகாணத்தை சேர்ந்தவர் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (வயது 114). இவர் கடந்த 1909 மே மாதம் 27-ந்தேதி ஆண்டியன் மாகாணம் தச்சிரா நகரில் பிறந்தார். மேலும் கடந்த 2022-ம் ஆண்டில் உலகில் உயிருடன் வாழும் மிக அதிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனைக்கு இவர் சொந்தக்காரராக மாறினார். இந்தநிலையில் தற்போது உடல்நலக்குறைவால் பெரெஸ் மோரா மரணம் அடைந்தார். இவருக்கு 11 குழந்தைகள், 41 பேரக்குழந்தைகள் மற்றும் … Read more

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவை

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்; அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் பணிப்புரையின் பிரகாரம், இம்முறையும் புத்தாண்டின்; இரண்டு வாரங்கள் விசேட பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை போக்குவரத்து சபை தயாரித்துள்ளது என்று அதன் பிரதானி எஸ்.எம்.டி.எல்.கே.டி. அல்விஸ் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்படி, இன்று (05) முதல் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் … Read more

Intel: “இந்தியாவை இனி தனி பிராந்தியமாக்குவோம்'' – இன்டெல் நிர்வாக துணைத் தலைவர் கிறிஸ்டோப் ஷெல்!

இன்டெல் நிறுவனம் உலகம் முழுவதும் கணினிகளுக்கான சிப்களை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. அத்துடன், விற்பனையிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், இன்டெல் நிர்வாக துணைத் தலைவரும், தலைமை வணிக அதிகாரியுமான கிறிஸ்டோப் ஷெல், `இந்தியாவை ஆசியா – பசிபிக் பகுதியிலிருந்து வெளியே எடுத்துத் தனிப் பிராந்தியமாக்குகிறோம்’ எனக் கூறியுள்ளார். Intel மீண்டும் மீண்டும் உச்சம் தொடும் தங்கம்… என்ன காரணம்? இனி உயருமா..? இதற்கு முன்பு இந்தியாவில் உள்ள நிறுவனமானது, ஆசிய பசுபிக் மற்றும் ஜப்பானின் … Read more

“கடன் வாங்குவதில் பாஜக அரசு வரலாறு காணாத சாதனை” – செல்வப்பெருந்தகை சாடல்

சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பிரச்சினைகளை திசைத் திருப்பி, மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து விடலாம் என்று மோடியும், பாஜக-வினரும் நயவஞ்சகமாக பேசி வருகிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசும் போது, … Read more

மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு; பெண்களுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், “நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.” போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மக்களவை தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஒரு குழுவை அமைத்திருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்தக் குழு தேர்தல் அறிக்கை தொடர்பாக நாடு … Read more

“கச்சத்தீவு விவகாரத்தில் வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” – இலங்கை அமைச்சர்

கொழும்பு: “கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட தமிழகத்தில் இதுதொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. கச்சத்தீவை யார் தாரைவார்த்தது என்ற விவாதங்களுக்கு மத்தியில் அதை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. இதற்கிடையே, “கச்சத்தீவை … Read more

Family Star: ஃபேமிலி ஸ்டார் க்ரிஞ்ச் படமா? இதோ ட்விட்டர் விமர்சனம்

Family Star Twitter Review: விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் தான் ஃபேமிலி ஸ்டார். இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன அமைச்சர்: வீடியோ வைரல்

Lok Sabha Elections: ஏர்வாடியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

லோக்சபா தேர்தல் 2024: காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி இணைந்து வெளியிட்டனர் தேர்தல் அறிக்கை…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இணைந்து வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கை இளைஞர்கள், பெண்களை, விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். இந்தியாவில் 18வது மக்களவையை … Read more