ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் 7வது முறையாக மாற்றமில்லை! ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தகவல்…

மும்பை:  ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும்,  வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (6.5%) மாற்றமில்லாமல் பழைய வட்டி விகிதமே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார். இந்த ரெப்போ வட்டி விகிதம் 7-வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எந்த மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

சென்னையில் 'புஷ்பா 2' டீசர் வேலைகள்…

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதியன்று அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளது. டீசருக்கான பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகள் தற்போது சென்னையில் உள்ள தேவிஸ்ரீ பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன், தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் அந்த ஸ்டுடியோவில் … Read more

மரண வேதனை அது..தற்கொலைக்கு முயன்றேன்..நடிகை மும்தாஜின் கண்ணீர் கதை!

சென்னை: தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் தான் நடிகை மும்தாஜ். இவர் மோனிசா என் மோனாலிசா என்கிற படத்தில் டி.ராஜேந்திர் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர், தற்போது சினிமாவில் இருந்து ஒதுக்கி இருக்கும் மும்தாஜ் தனது வாழ்க்கையின் கண்ணீர் கதையை மனம் திறந்த பேட்டி அளித்துள்ளார்.

2ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: உ.பி.யில் 175 பேர் வேட்புமனு தாக்கல்

லக்னோ, நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா – ஐதராபாத் எப்.சி அணிகள் இன்று மோதல்

கோவா, 12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கோவாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கோவா – ஐதராபாத் எப்.சி அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் கோவா 19 ஆட்டங்களில் ஆடி 10 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி கண்டு 36 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் … Read more

தைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் நிலநடுக்கம்

பெய்ஜிங், தைவான் நாட்டில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல இடிந்த நிலையில், 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதை தொடர்ந்து இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், தைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. உள்ளூர் நேரப்படி காலை 8.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்கவியல் மையம் … Read more

19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்று (05) காலியில் ஆரம்பமாகும்

இலங்கை – அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டி இன்று (05)இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 7ஆம் திகதியும், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி 9ஆம் திகதியும் காலி சர்வதேச … Read more

`சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..!’ – சொல்கிறார் கங்கனா ரனாவத்

இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,“பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர். நடிகை கங்கனா ரணாவத் வரவிருக்கும் தேர்தல் ஒரு தர்ம யுத்தம். மலையகப் பெண்கள் என்னைத் தேர்ந்தெடுத்து பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவதன் மூலம் … Read more

“பழனிசாமி செய்த துரோகத்தால் இரட்டை இலைக்கு எதிராக பேச வேண்டிய நிலை” – சி.ஆர்.சரஸ்வதி

மதுரை: மதுரை சோழவந்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேனி நாடாளுமன்ற அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்குகள் கேட்டு சி.ஆர்.சரஸ்வதி பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் மூன்று அணியாக இருக்கிறோம், ஒன்று துரோகத்துக்கு பேர் போன, இரட்டை இலை சின்னத்தை விலைபேசிக்கொண்டு திமுகவுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்து, அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிற எடப்பாடி அணி. மற்றொன்று திமுக அணி. அடுத்தது தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் என மூன்று அணிகள் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி … Read more

மீரட் | அருண் கோவிலை ஆதரித்து ராமாயண தொடரில் லஷ்மண், சீதாவாக நடித்தவர்கள் பிரச்சாரம்

புதுடெல்லி: 1980 களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் வெளியான ராமாயணம் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் பாஜக வேட்பாளராகி உள்ளார். உத்தரப்பிரதேசம் மீரட்டில் போட்டியிடும் அவருக்காக அவருடன் அத்தொடரில் லஷ்மண், சீதாவாக நடித்த சகநட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதன் பலனை மக்களவைத் தேர்தலில் அனுபவிக்க பாஜக தயாராகி வருகிறது. 1980களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் வெளியான ராமாயணம் தொடரில் ராமராக நடித்தவருக்கு போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராமராக நடித்தவர், மகராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த … Read more