சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்பு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் தனது கட்சியினருக்கு அனுப்பிய செய்திக்குறிப்பை அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்றுவாசித்தார். அதில் கூறப்பட்டதாவது: … Read more

6-ஜி தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்: மத்திய தொலைதொடர்புத் துறை செயலர் நம்பிக்கை

சென்னை: விரைவில் வரவுள்ள 6-ஜி தொழில்நுட்பம் இந்தியாவிலும், உலகிலும் பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை செயலர் தீரஜ் மிட்டல் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை ஐஐடி, மத்திய அரசின் தொலைதொடர்புத்துறையுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான சாலைபயணத்தை உறுதி செய்யும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தையும், இதுதொடர்பான 2 நாள் மாநாட்டையும்மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை செயலர் தீரஜ் மிட்டல் டெல்லியில் இருந்தவாறு காணொலி வாயிலாக … Read more

திமுக, பாஜக குறித்து கடுமையாக விமர்சித்த நடிகை விந்தியா

கரகாட்டக்காரன் திரைப்படத்திலாவது கார் பேரீச்சை பழத்திற்காகவாவது தேரும், திமுக கூட்டணி பைசாவிற்கு கூட தேராது என திமுகவின் கூட்டணியை நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.  

 தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று முதல் 3 நாட்களுக்குத் தமிழகத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”05/04/2024 (வெள்ளிக் கிழமை) 06/04/2024 (சனிக்கிழமை) மற்றும் 07/04/2024 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  … Read more

டிமிக்கி கொடுக்கும் சிறுத்தை.. மயிலாடுதுறையில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை.. இதோ லிஸ்ட்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தை சாலைகளில் Source Link

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி

தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய அட்லி ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து 'ஜவான்' என்ற மாபெரும் வெற்றி படத்தை தந்தார். அடுத்து அல்லு அர்ஜூனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இயக்கம் மட்டுமின்றி படங்களும் தயாரிக்கிறார் அட்லி. தனது தயாரிப்பு நிறுவனமான 'ஏ பார் ஆப்பிள்' என்ற நிறுவனத்தில் தமிழில், ‛சங்கிலி புங்கிலி கதவ தொற' என்ற படத்தை தயாரித்தார். தற்போது ஹிந்தியில் ஒரு படம் தயாரிக்கிறார். அடுத்து தமிழில் ஒரு … Read more

பிரபல நடிகை வீட்டில் நடந்த சோகம்… கண்ணீரில் ரசிகர்கள்!

சென்னை: முன்னணி நடிகையான  மீரா ஜாஸ்மீன் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. மீரா ஜாஸ்மின் தந்தையின் மறைவுக்கு தமிழ் மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மீரா ஜாஸ்மின்  தனது தந்தையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து உருக்கமாக கருத்தை பதிவிட்டுள்ளார் ரன் படத்தின் மூலம் அறிமுகமான மீரா ஜாஸ்மின்

“வாழ்வு கொடுத்த இரட்டை இலைக்கு ஓ.பி.எஸ்ஸின் மனசாட்சி வாக்கு கேட்டுள்ளது..!” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பார்வர்ட் பிளாக் தலைவர் மூக்கையாத்தேவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ஆர்.பி.உதயகுமார் பின்பு ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கச்சத்தீவு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தபோது, அதற்கு எதிராக குரல் கொடுத்ததில் முக்கியமானவர் மூக்கையாத்தேவர். கச்சத்தீவை மீட்க பல்வேறு வழக்குகளை முன்மாதிரியாக எடுத்துரைத்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடுத்தார். கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை முடிவு. … Read more

புதுச்சேரி: வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் மூலம் 50,000 பெற்றோருக்கு கடிதம் அனுப்ப திட்டம்

புதுச்சேரி: தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் கடிதம் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. கிட்டதட்ட 50 ஆயிரம் பெற்றொர்களுக்கு இந்த கடிதம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19.04.2024 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி, … Read more

‘கட்டாயத்தால் அரசியல்வாதி ஆனவர் ராகுல் காந்தி!’ – பாஜக வேட்பாளர் கங்கனா கருத்து

புதுடெல்லி: “காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சொந்த விருப்பத்துக்கு மாறாக கட்டாயத்தினால் அரசியல்வாதியாக மாறியுள்ளதாக தெரிகிறது” என்று நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் கங்கனா. அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு விஷயத்தை அவரால் (ராகுல் காந்தி) செய்ய முடியுமா இல்லையா என்பதை பற்றி கவலை இல்லாம் தொடர்ந்து அவர் மீது அந்த விஷயம் … Read more