இன்றைய ஐ பி எல் போட்டி :  ஐதராபாத்தில் சென்னை – ஐதராபாத் அணிகள மோதல்

ஐதராபாத் இன்று ஐதராபாத்தில் நடைபெறும் ஐ பி எல் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. தற்போதைய 17 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று  ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 18 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.  ஐதராபாத் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் வீழ்ந்தது. ஆனால் அடுத்த … Read more

பஞ்சதன் ஸ்டுடியோவை உருவாக்கிய எம்மி பால் மறைவு : ஏஆர் ரஹ்மான் இரங்கல்

இந்திய சினிமாவை தாண்டி ஆஸ்கர் வரை வென்று சாதித்தவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏஆர் ரஹ்மானின் இசைக்கு பெரும் பங்காற்றியது அவரது பஞ்சதன் ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோவில் இருந்து அவரின் சினிமா பயணம் றெக்க கட்டி பறக்க ஆரம்பித்தது என்று சொல்லலாம். இந்த ஸ்டுடியோவை உருவாக்கியவர் எம்மி பால், 74. உடல்நலக்குறைவால் இவர் நேற்றுமுன்தினம் சென்னையில் காலமானார். எம்மி பால் மறைவுக்கு இசையமைப்பாளர் … Read more

தனுஷுடன் சண்டை.. 6 வருடங்கள் பேச்சுவார்த்தை இல்லை.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்.. வெளியான டாப் சீக்ரெட்

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் ஜிவி பிரகாஷ். ஆரம்பத்தில் இப்படி அவர் அடையாளப்பட்டாலும் தற்போது சிறந்த இசையமைப்பாளர், நல்ல நடிகர் என்ற அடையாளத்தோடு இருக்கிறார். அவரது பாடல்கள் பலரது ஃபேவரைட்டாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் கள்வன் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தச் சூழலில் தனக்கும் தனுஷுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து சமீபத்திய பேட்டியில்

“பாஜக கூட்டணிதான் தமிழகத்தின் மெகா கூட்டணி” – தென்காசி வேட்பாளர் ஜான்பாண்டியன்

ராஜபாளையம்: “தரணி சர்க்கரை ஆலை 5 ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் தரணி சர்க்கரை ஆலை பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்” என ஜான் பாண்டியன் பேசியுள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான் பாண்டியன் ராஜபாளையம் பச்சமடம், ஜவகர் மைதானம், அம்பலப்புலி பஜார், ஶ்ரீரெங்கபாளையம், பேருந்து நிலையம், பொன்விழா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: “ராமதாஸ், ஜி.கே.வாசன், பன்னீர்செல்வம், டி.டி.வி … Read more

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை 20 மணி நேரத்துக்குப் பின் மீட்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தையை 20 மணி நேர போராட்டத்துப் பின்னர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். நேற்று மாலை 6.30 மணியளவில் மீட்புப் பணி தொடங்கிய நிலையில் குழந்தை தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் லச்சாயன் கிராமத்தில் நேற்று (ஏப்.3) மாலை ஸ்வஸ்திக் முஜகொண்டா என்ற 2 வயது ஆண் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. வீட்டிலிருந்து விளையாட வெளியே சென்ற குழந்தை தவறிவிழுந்துவிட … Read more

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு

டெல்லி கர்நாடகா அரசு தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளது. தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு சார்பில் கூட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரையும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான … Read more

‛விடாமுயற்சி' அஜித் எடுத்த ரிஸ்க் : மேக்கிங் வீடியோ வெளியீடு

மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' படத்தில் அஜித் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடக்கிறது. தற்போது படத்திற்கு பிரேக் விட்டுள்ளனர். இதனால் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். விடாமுயற்சி படம் பற்றி நிறைய நெகட்டிவ்வான செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக படம் டிராப், படம் இப்போதைக்கு வராது என்கிற மாதிரியான செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை அஜித்தின் மேலாளர் … Read more

விஜயகாந்த்தின் பலமும் பலவீனமும் என்ன தெரியுமா?.. அவரே என்ன சொல்லிருக்காரு பாருங்க

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் இன்னும் சில காலம் உயிரோடு இருந்திருக்கலாமே என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவானவர்களும் சோகத்துடன் கூறிவருகின்றனர். அதேபோல் நட்சத்திரங்களும் விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளையும் தொடர்ந்து பகிர்ந்துவருகின்றனர். இந்தச் சூழலில் தனது பலம் என்ன

பிரதமர் ‘ரோடு ஷோ’வில் மாணவர்கள்: காவல் துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளிக் குழந்தைகள் சென்றது தொடர்பாக பெற்றோர்கள் எதுவும் புகார் அளித்தார்களா? நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பள்ளி ஆசிரியர்கள் யாரும் உடன் இருந்தார்களா? இந்த வழக்கில் சிறார் நீதிச் சட்டம் எப்படி பொருந்தும் என விளக்கம் அளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் கடந்த மார்ச் 18-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி … Read more

பிஹாரில் சிராக் கட்சியின் 22 முக்கியத் தலைவர்கள் விலகல்: இண்டியா கூட்டணியை ஆதரிப்பதாக அறிவிப்பு

புதுடெல்லி: பிஹாரில் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியில் இருந்து 22 முக்கியத் தலைவர்கள் விலகியுள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத இவர்கள், இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராக எல்ஜேபி உள்ளது. பிஹாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதியில் இக்கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இவை சமஸ்திபூர், ஹாஜிபூர், வைஷாலி, ககரியா மற்றும் ஜமுவாய் ஆகியன. இவற்றில் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அன்றி … Read more