மதுரா தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த நடிகை ஹேமமாலினி

மதுரா இன்று நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கலி செய்துள்ளார். ஏப்ரல் 26 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 28 ஆம் தேதி தாக்கல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன்  நிறைவடைகிறது. நாளை  வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வருகிற 8 ஆம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். கடந்த 2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் “கனவுக்கன்னி” என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் … Read more

டேனியல் பாலாஜியின் கடைசி படம் : தயாரிப்பாளர் உருக்கம்

சமீபத்தில் மறைந்த டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் 'பிபி 180'. இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார். அதுல் இந்தியா மூவீஸ் சார்பில் போஸ்மியா தயாரித்துள்ளார். ஜேபி இயக்கியுள்ளார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். கே.பாக்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், நைனி சாவி உள்பட பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் போஸ்மியா கூறியிருப்பதாவது : உங்களது இந்த திடீர் மறைவு சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் திறமை, ஆர்வம் மற்றும் உங்கள் கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த … Read more

Bravo: ஐபிஎல் ஒருபக்கம் இருக்கட்டும்.. டபுள் டக்கர் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட பிராவோ!

சென்னை: தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டபுள் டக்கர் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்கள் மிகச்சிறப்பான வகையில் நடந்து வருகிறது. படத்தில் அனிமேஷன் கேரக்டர்கள் முக்கியமான ரோலில் இடம்பெற்றுள்ள நிலையில், படத்தின் அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. கடந்த

“ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறாது” – முத்தரசன்

மேட்டூர்: “ஐடி, இடி, சிபிஐ போன்ற அமைப்புகள் நிலைகுலைந்து மோடியின் உத்தரவை செயல்படுத்தக் கூடிய அமைப்புகளாக மாறிவிட்டன” என இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். மேட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் முத்தரசன் இன்று நிருபர்களிடம் கூறியது: “18-வது மக்களவைத் தேர்தல் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவோம் கூறி வருகின்றனர். இடங்களின் எண்ணிக்கைகளைப் … Read more

ஹேமமாலினியை அவதூறாக பேசினாரா காங்கிரஸ் நிர்வாகி ரன்தீப்? – சர்ச்சையும் பின்னணியும்

பாஜக எம்.பி.யும், மதுரா தொகுதி வேட்பாளருமான ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான ரன்தீப் சுர்ஜேவாலா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், தனது கருத்தை பாஜக திரித்து வெளியிட்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். “பாஜகவின் ஐ.டி துறை தலைவர் அமித் மாள்வியா தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது. முழுமையாக வெளியிடாமல் சிதைத்து தவறாகப் பொருள்படும்படி வெளியிடப்பட்டுள்ளது. எனது நோக்கம் நிச்சயமாக ஹேமமாலினியை அவமதிப்பது … Read more

தேர்தல் ஆணையத்தை  நாடகக் கம்பெனி என விமர்சித்த சீமான்

சென்னை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி என விமர்சித்துள்ளார். ’ மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இரா.கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.. சீமான் தனது உரையில், ”தேர்தல் ஆணையமே ஒரு பெரிய நாடக கம்பெனி தான். அப்பாவி மக்களிடம் பணத்தைப் பிடிக்கும் தேர்தல் ஆணையம், வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதில்லை. தொழில்நுட்பம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு … Read more

சாத்தியமே இல்லை.. கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்க முடியாது.. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு: கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். மேலும், கச்சத்தீவை திரும்ப வழங்கினால் இலங்கையின் கடல்வளம் சூறையாடப்படும் எனவும் தடாலடியாக கூறியுள்ளார். தமிழக அரசியலில் தற்போது கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மீண்டும் இந்த Source Link

இயக்குனரான தொகுப்பாளர்

சின்னத்திரையில் நட்சத்திர தொகுப்பாளராக பணியாற்றிவர் ஆடம்ஸ். சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தும் உள்ளார். அவர் தற்போது 'கேன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், கருணாநிதி தயாரிக்கிறார். இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், க்ஷிஜிக்ஷி கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், ஆகியோர் முக்கிய … Read more

எம்ஜிஆர் கேட்டா பாலய்யா மாதிரி பொம்மை வருது.. லியோவை விட இதுல சிஜி அதிகம்.. டபுள் டக்கர் சீக்ரெட்!

சென்னை: அறிமுக இயக்குநர் மீரா மகதி இயக்கத்தில் தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட், கோவை சரளா, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள டபுள் டக்கர் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த சம்மருக்கு குழந்தைகளை டார்கெட் செய்யும் விதமாக லெஃப்ட், ரைட் என இரு அனிமேஷன் பொம்மைகள் ஹீரோவின்

“நாமும் உதயநிதி, மு.க.ஸ்டாலினுக்கு பெயர் வைப்போம்…” – அண்ணாமலை பிரச்சாரம் @ நாமக்கல்

நாமக்கல்: “இண்டியா கூட்டணியினர் கேலிக்கூத்து செய்து கொண்டுள்ளனர். திமுக கூட்டணிக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் பயனில்லாத வாக்கு” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து பரமத்தியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரமதர் மோடி 3-வது முறையாக பிரதமராக அமரும்போது தமிழகத்தில் இருந்து நிறைய பேர் எம்பியாக செல்ல வேண்டும். நாமக்கல்லில் தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திரம் படைக்கும். … Read more