பட்டியலின இளம் பெண் வேட்பாளர்… யார் இந்த சாம்பவி சவுத்ரி? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் பிஹாரின் சமஸ்திபூர் தொகுதியில் களம் காண்கிறார் பிஹார் அமைச்சர் (ஜேடியு) அசோக் சவுத்ரியின் மகள் சாம்பவி குணால் சவுத்ரி. 25 வயதான இவர், பட்டியலின இளம் பெண் வேட்பாளர் என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளார். சமஸ்திபூர் தொகுதியில் களம் காணும் சாம்பவி குணால் சவுத்ரிவுக்கு சீட் கிடைத்ததில் அவரது … Read more

மோட்டோ எட்ஜ் 50 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 50 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் மோட்டோரோலா எட்ஜ் 50 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. வயர் மற்றும் … Read more

8050 தமிழக வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிப்பு

சென்னை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவித்துள்ளார். தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம், “திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 18ம் தேதிக்குள் தபால் வாக்குக்களைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தபால் வாக்குகளை வாங்க முதல்முறை வீடுகளுக்குச் செல்லும்போது வாக்காளர்கள் வீட்டில் இல்லை … Read more

தில் ராஜூ தயாரிப்பில் தனுஷ்?

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களைக் தயாரித்து வருகிறார். கடந்தாண்டு முதல் முறையாக தமிழில் நடிகர் விஜய்யை வைத்து 'வாரிசு' என்கிற படத்தை தயாரித்தார். தற்போது விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிப்பில் ‛தி பேமிலி ஸ்டார்' என்ற படத்தை எடுத்துள்ளார். நாளை தெலுங்கு மற்றும் தமிழில் இந்தப்படம் வெளியாகிறது. இந்நிலையில் வாரிசு படத்திற்கு பின் மீண்டும் ஒரு தமிழ் படத்தை எடுக்க … Read more

Actor Ajithkumar: அஜித் இவ்வளவு ரிஸ்க் எடுக்கறாரு.. ஆனா.. சுரேஷ் சந்திரா விளக்கம்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அசர்பைஜானில் நடந்த நிலையில் அங்கு காலச்சூழல் படப்பிடிப்பை நடத்த சரியாக இல்லாத காரணத்தால் படத்தின் சூட்டிங்கை அங்கே நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்நிலையில் தற்போது மீண்டும் இம்மாதம் பத்தாம் தேதி முதல் இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்க உள்ளதாக

‘நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் திமுக சமரசம் செய்து கொண்டதில்லை’ – துரைமுருகன்

தருமபுரி: துடைத்து எறியக் கூடிய கட்சி அல்ல திமுக என தருமபுரி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் இண்டூரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 4), திமுக சார்பில் தருமபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.மணிக்கு ஆதரவு கேட்டு நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது… “தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசுகின்ற பிரதமர் மோடி, திமுக-வை துடைத்தெறிய வேண்டும் என்கிறார். … Read more

பங்குச்சந்தை முதலீடுகள், விவசாய நிலம் – ராகுல் காந்தி சொத்து மதிப்பு ரூ.20 கோடி

வயநாடு: மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வேட்புமனு தாக்கலின்போது பிரமாணப் பத்திரத்தில் தனக்கு 20 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. இதற்கான வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் உடன் சொத்து மதிப்பு உள்ளிட்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் தனக்கு 20 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, … Read more

SRH vs CSK: சிஎஸ்கேவுக்கு ஆப்பு வைக்க வரும் தமிழக வீரர்… பிளேயிங் லெவனில் வரும் மாற்றங்கள்!

SRH vs CSK Playing XI Changes: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் (IPL 2024) தற்போது பெரும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நாட்டின் 13 நகரங்களில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இன்று வரை 17 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஹைதராபாத் நகரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது.  … Read more

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் : கனிமொழி

மதுரை தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என கனிமொழி கூறியுள்ளார்.   திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது கனிமொழி, ”மத்திய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. தமிழகத்தை மதிப்பது கிடையாது. தமிழகம் மழை,வெள்ளத்தால் பாதித்தாலும் எந்த நிவாரணமும் வராது.  அருணாச்சலப் பிரதேசத்தைச் சீனா ஆக்கிரமித்துப் பெயர் மாற்றமே செய்து விட்டது. இதைப் பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது கிடையாது.  … Read more

ஆட்டம் காட்டும் சிறுத்தை.. மயிலாடுதுறையில் நாளை 9 பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை சுற்றித்திரிவது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதனை பிடிக்க போலீசார், வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையே மக்களின் பாதுகாப்பு கருதி நாளை மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட Source Link