மேள தாளங்கள் முழங்க ஏராளமான தொண்டர்களுடன் பிரசாரத்தை தொடங்கிய தயாநிதி மாறன்!

DMK MP Dayanidhi Maran Campaigns in Central Chennai: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மேள தாளங்கள் முழங்க ஏராளமான தொண்டர்களுடன் பிரசாரத்தை தொடங்கினார்.

மயங்க் யாதவ் வேகத்திற்கு இதுதான் காரணமா…? அவரின் தாயார் பகிர்ந்த சீக்ரெட்

Mayank Yadav Food Diet: கிரிக்கெட் உலகில் தற்போது இந்தியா அடைந்திருக்கும் இடம் என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் யாராலுமே யூகித்திருக்க முடியாது. இந்தியாவில் விளையாட்டு ரீதியிலான சந்தையில் கிரிக்கெட் மட்டுமே பெரும்பான்மை பங்கை வகிக்கின்றது. உலகிலேயே அதிக செல்வம் கொழிக்கும் கிரிக்கெட் வாரியம் என்பது பிசிசிஐ தான். கிரிக்கெட்டில் இந்தியாவின் உயரத்திற்கு ஐபிஎல் தொடரே ஒரு பொருத்தமான உதாரணமாக இருக்கும்.  1983ஆம் ஆண்டுக்கு பின்னர் கிரிக்கெட் இந்தியாவின் பரந்துப்பட்ட நகரங்களில் கோலோச்சியது. அதில் இருந்து … Read more

Kalvan Review: உணர்வுபூர்வமான கதை; தடம் மாறி டிரெக்கிங் போகும் திரைக்கதை! இதைக் கவனித்திருக்கலாமே?!

அனாதையான திருடனுக்கும் அவனால் தத்தெடுக்கப்பட்ட தாத்தாவிற்கும் இடையே பூக்கும் பாசத்தைப் பேசுகிறது `கள்வன்’. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இருட்டி பாளையம் கிராமத்திலுள்ள மக்கள் காட்டு யானைகளால் உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் சந்திக்கிறார்கள். மறுபுறம், அதே கிராமத்தில் சிறு சிறு திருட்டுகளைச் செய்து, கெம்பராஜும் (ஜி.வி,பிரகாஷ் குமார்) சூரியும் (KPY தீனா) வாழ்ந்து வருகிறார்கள். வனக்காவலர் பணியில் சேர முயன்றுகொண்டிருக்கும் கெம்பா, முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவைத் தத்தெடுத்து, தன் வீட்டிற்குக் … Read more

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

புதுடெல்லி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளன. அதன்படி இன்று … Read more

பயன்படுத்திய சேலைகளை விற்று உதவிய நவ்யா நாயர்

தமிழில் 'அழகிய தீயே' படம் மூலமாக அறிமுகமானவர் மலையாள நடிகை நவ்யா நாயர். தொடர்ந்து சேரனுடன் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாளத்தில் அதிக அளவில் படங்களின் நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு பத்து வருடங்கள் பெரிய அளவில் படங்களில் நடிக்காத அவர் தற்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்த நவ்யா நாயர் … Read more

Sevvanthi serial: செவ்வந்தி சீரியலில், திவ்யாவுடன் மோதும் நட்சத்திரா.. புதிய பொலிவுடன் வரும் சீரியல்!

சென்னை: சன் டிவி சீரியல் என்றாலே, பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மக்களை உட்கார்ந்த இடத்திலேயே கட்டி போடும் வித்தயை சன் டிவி மிகச் சரியாக சொல்லி அடிக்கும். சன் டிவியில் தினமும் காலை 11.30க்கு ஒளிபரப்பாகும் மக்கள் மனதை கொள்ளை அடித்த செவ்வந்தி சீரியலில், அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களை சீரியல் தரப்பினர் செய்து வருகின்றனர். இந்த சீரியலில்

முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய 2024.04.20ஆம் திகதி முதல் 2024.05.20ஆம் திகதி வரையான ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. மேலும், ஏதேனும் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் அதை சட்ட ரீதியில் விளகிக்கொல்வதற்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 2. இந்த பொது மன்னிப்பானது 2024.04.02ஆம் … Read more

சென்னை: ரூ.28 லட்சத்துக்காக கொலைசெய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் – ஆறு பேர் கைதானதன் பின்னணி!

சென்னை தி.நகர் மேட்லி 2-வது தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி (60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 29.3.2024-ம் தேதி பழனிசாமி, வேளச்சேரி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு டூவிலர்களில் வந்த ஒரு கும்பல் பழனிசாமியை வழிமறித்து, கத்தியால் குத்திக் கொலைசெய்து விட்டு தப்பிச் சென்றது. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தரமணி போலீஸார், கொலை வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணையில் பழனிசாமிக்கும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த … Read more

பிஹாரில் சிராக் கட்சியின் 22 முக்கியத் தலைவர்கள் விலகல்: இண்டியா கூட்டணியை ஆதரிப்பதாக அறிவிப்பு

புதுடெல்லி: பிஹாரில் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியில் இருந்து 22 முக்கியத் தலைவர்கள் விலகியுள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத இவர்கள், இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராக எல்ஜேபி உள்ளது. பிஹாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதியில் இக்கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இவை சமஸ்திபூர், ஹாஜிபூர், வைஷாலி, ககரியா மற்றும் ஜமுவாய் ஆகியன. இவற்றில் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அன்றி … Read more

கேரளாவில் எஸ்டிபிஐ ஆதரவை ஏற்க காங்கிரஸ் மறுப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு அளிக்க எஸ்டிபிஐ (SDPI) முன்வந்த நிலையில், அந்த ஆதரவை ஏற்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, நேற்று (புதன்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் … Read more