மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் பலி

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை தொழிற்சாலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. மருந்து தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக தொழிற்சாலையில் இருந்த பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது. இதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 தொழிலாளர்கள் பலத்த … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. அடுத்த … Read more

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு உலகம் முழுவதும் திடீரென வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கின. நேற்று இரவு 11.45 மணியளவில் இரண்டு தளங்களிலும் ஆயிரக்கணக்கான பயனர்கள் சிக்கல்களை சந்தித்தனர். செயலியில், உள்நுழைய முயற்சிக்கும்போது, தற்போது சேவை கிடைக்கவில்லை என்று காட்டியது. இந்த நிலையில் வாட்ஸ் அப் முடங்கியதாக அமெரிக்காவில் சுமார் 12,000 பேர் புகாரளித்துள்ளனர். இந்தியாவில் 20,000-க்கும் மேற்பட்ட பயனர்களும், இங்கிலாந்தில் … Read more

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயர்வு.., புதிய EPMS 2024 மானியம் என்றால் என்ன ?

FAME-II மானியம் முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய EPMS 2024 (Electric Mobility Promotion Scheme) மானியத்தின் கீழ் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது. புதிய எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் 2024 கீழ் ஏப்ரல் முதல் 31 ஜூலை 2024 வரையிலான காலகட்டத்துக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின் கீழ் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மானியம் அதிகபட்சமாக ரூ.10,000 ஆக … Read more

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு!

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

“நான் உயிரோடு இருக்கும்வரை அதைப் படமாக்க அனுமதிக்க மாட்டேன்!"- போனி கபூர்

அமித் ஷர்மா இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மைதான்’. கால்பந்து விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் பிரியாமணி, கஜராஜ் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஃபுட்பால் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. மைதான் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் … Read more

“ரபேல் முதல் தேர்தல் பத்திர ஊழல் வரை” – பட்டியலிட்டு மோடியை சாடிய செல்வப்பெருந்தகை

சென்னை: பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் முதலில் வெளி வந்தது ரபேல் விமான கொள்முதல் ஊழல். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 41,000 கோடி. ஆனால், எந்தவித விசாரணைக்கும் உட்படுத்த மோடி தயாராக இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 2014 பொதுத் தேர்தலுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நரேந்திர மோடி அளித்த பேட்டியில், ‘பாஜக ஆட்சி அமைந்தால் ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து … Read more

மண்டியா காங்கிரஸ் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.633 கோடி: டி.கே.சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.593 கோடி 

பெங்களூரு: ம‌ண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வெங்கட்ராமண கவுடாவின் சொத்து மதிப்பு ரூ.633 கோடி எனவும், பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடும் டி.கே.சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.593 கோடி எனவும் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு ஊரக தொகுதியில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் 4ம் முறையாக காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது டி.கே.சுரேஷ் தனக்கு ரூ. 338.87 … Read more

சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் சிங்.. இனி மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைப்பது சுலபமா?

Arvind Kejriwal Case: சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ளதால், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கு ஆறுதல், உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், அவரை போல் மற்ற தலைவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Aparna Das : மஞ்சுமெல் பாய்ஸ் நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்! காதல் மலர்ந்தது எப்படி?

Latest News Actress Aparna Das Marriage : சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தவரை, அபர்ணா தாஸ் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.