சஞ்சய் நிருபம் காங்கிரசில் இருந்து நீக்கம்; சிவசேனாவில் இணைவாரா?

புனே, காங்கிரஸ் கட்சியின் மராட்டிய மாநில மூத்த தலைவர்களில் ஒருவர் சஞ்சய் நிருபம். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சியில் வேட்பாளர்களை நிறுத்துவது பற்றி சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசினார். சமீபத்தில், மும்பையின் வடக்கு தொகுதி பற்றி ஒரு வார காலத்திற்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் மிரட்டல் விடும் வகையில் பேசியது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் கூறும்போது, சஞ்சய் நிருபமுக்கு எதிரான ஒழுங்கீன புகார்கள், கட்சி … Read more

வீராங்கனைகளை தாக்கிய விவகாரம்: விசாரணையை முடித்து வைத்த இந்திய கால்பந்து சம்மேளனம்

புதுடெல்லி, கோவாவில் நடந்த இந்திய பெண்கள் கால்பந்து லீக்கின் 2-வது டிவிசன் போட்டியில் இமாசலபிரதேசத்தை சேர்ந்த காத் எப்.சி. அணிக்காக விளையாடிய 2 வீராங்கனைகளை, அந்த கிளப்பின் உரிமையாளரும், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினருமான தீபக் ஷர்மா கடந்த வாரம் இரவு ஓட்டல் அறையில் அத்துமீறி நுழைந்து தாக்கினார். இந்த சம்பவம் குறித்து போட்டியை நடத்திய கோவா கால்பந்து சங்கம் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட தீபக் ஷர்மா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது … Read more

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு – மீட்புப்பணிகள் தீவிரம்

தைபே, கிழக்கு ஆசிய நாடான தைவானின் தலைநகரான தைபேவில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ஹூவாலியன் நகரில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவானதாக தைவான் அரசு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலம் மற்றும் நீர் பரப்பையொட்டிய பகுதியில் 32 கி.மீ ஆழத்தில் 7.4 புள்ளிகளை கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் நிறுவனம் கூறுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவானை தாக்கிய … Read more

ஏப்ரல் 29ல் புதிய மஹிந்திரா XUV 3XO விற்பனைக்கு அறிமுகம்

XUV300 என அழைக்கப்பட்டு வந்த மாடல் புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் மஹிந்திரா XUV 3XO என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய மாடலில் பயன்படுத்தப்பட உள்ள 3-எக்ஸ்-ஓ என குறிப்பிடப்படுகின்றது. மஹிந்திராவின் பிரீமியம் டிசைன் பெற உள்ள முதல் மாடலான 3XO எஸ்யூவி பல்வேறு டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ICE வெர்ஷனில் தொடர்ந்து XUV300 பெயர் பயன்படுத்தலாம். Mahindra XUV 3XO XUV 3XO இவி காரில் 148 hp பவர் மற்றும் … Read more

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வரலாற்று வெற்றி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் தென்னாபிரிக்க மகளிர் அணிக்கும் இடையில் நடைபெற்ற வு20 தொடரில் இலங்கை மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட வு20 போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை மகளிர் அணி நேற்று (03) 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்க மகளிர் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்ததுடன் அவர்கள் தமது 20 … Read more

வயநாடு: வேட்புமனுத் தாக்கல் செய்த ராகுல் காந்தி, ஆனி ராஜா… சொத்து விவரங்கள் தெரியுமா?!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதில் இரண்டாம் கட்டமாக, கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று (ஏப்ரல் 4). ராகுல் காந்தி – அன்னி ராஜா இந்த நிலையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தியும், சிபிஐ கட்சியின் வேட்பாளராக இந்திய மகளிர் தேசியக் … Read more

‘ஸ்டார் தொகுதி’ நீலகிரி நிலவரம் என்ன? – ஒரு பார்வை

சமவெளியும், மலைப்பிரதேசமும் கலந்த தொகுதியாக உள்ளது நீலகிரி மக்களவைத் தொகுதி. தனித் தொகுதியான இங்கு பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், ஆகியோர் போட்டியிடுவதால் இத்தொகுதி தனிக்கவனம் பெற்று விஐபி தொகுதியாக மாறியுள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகமண்டலத்தைக் கொண்டது நீலகிரி மக்களவைத் தொகுதி. உதகை, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர்(தனி) ஆகிய ஆறு … Read more

நடிகை சுமலதா எம்.பி. விரைவில் பாஜகவில் இணைகிறார்

கன்னட நடிகர் அம்பரீஷ், மண்டியா தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பிறகு அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா காங். சார்பில் போட்டியிட விரும்பினார். சீட் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சுமலதா, இந்த தேர்தலில் பாஜகவிடம் சீட் கேட்டார். பாஜக மேலிடம் மண்டியா தொகுதியை கூட்டணியான மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கியது. அங்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடுகிறார். இதனால் அதிருப்தி … Read more

கானாவில் 12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயது மத போதகர்

அக்ரா: ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகரம் அக்ராவின் நுங்குவா பகுதியைச் சேர்ந்தவர் நூமோ பார்கடே லாவே சுரு எனும் 63 வயது மத போதகர். நுங்குவாவின் பூர்வக்குடி மக்களுக்கு மதகுருமாராக இவர் இருந்து வருகிறார். கானா நாட்டு சட்டப்படி 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே மணமுடிக்கலாம். இருப்பினும் சமய சடங்குகளை முன்னிறுத்தி 12 வயது சிறுமியை மத போதகர் சுரு கடந்த சனிக்கிழமை அன்று மணமுடித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. இதற்கு … Read more

AI சூழ் உலகு 17 – ‘டீப்ஃபேக் வீடியோ, வாய்ஸ் குளோனிங்’ – இது தேர்தல் கால அச்சுறுத்தல்

ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள சுமார் 60 நாடுகளில் 2024-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவிலும் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் களத்தில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்’ என கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. கூடவே எதிர்க்கட்சிகளை … Read more