சிறுத்தை நடமாட்டம்: 7 பள்ளிகளுக்கு விடுமுறை.. 4 பள்ளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..

Leopard Movement in Mayiladuthurai: சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறையில் பொது தேர்வுகள் நடைபெறும் நான்கு பள்ளிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏழு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்தியா!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 5 பொட்டிக்கள் கொண்ட டி20 ஐ தொடர் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி சில்ஹெட்டில் தொடங்க உள்ளது.  கடைசி போட்டி மே 9 ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறுகிறது.  வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏப்ரல் 2ம் தேதி இந்த தொடருக்கான முழுமையான அட்டவணையை அறிவித்தது. இந்தியா பெண்கள் மற்றும் பங்களாதேஷ் பெண்கள் இடையேயான டி20 ஐ தொடர் ஏப்ரல் 28 … Read more

“பேட்டி என்ற பெயரில் சூட்டிங்” பிரதமர் மோடியின் ‘தந்தி டிவி’ பேட்டியை கலாத்த முதலமைச்சர் ஸ்டாலின்…

 சென்னை: “பேட்டி என்ற பெயரில் சூட்டிங் செய்திருக்கிறார் பிரதமர் மோடி” என பிரதமர் மோடி சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். ஜூன் 3 – நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு! ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடுதலையின் துவக்க நாள்! நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞர், தன் வாழ்நாள் எல்லாம், எந்த ஜனநாயகத்தைக் காக்கப் பாடுபட்டாரோ – எந்த மதச்சார்பின்மையை … Read more

மானமே போகுது.. ஆடையை கழற்ற சொல்லி.. நீதிபதி ரூமிலிருந்து அழுதபடியே பெண்.. என்ன நடக்குது இந்தியாவில்?

ஜெய்ப்பூர்: திரிபுரா சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் முடிவடையாத நிலையில், இன்னொரு கொடுமை நம்முடைய நாட்டில் நடந்துள்ளது..!! பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்தபடியே வருகின்றன.. இவைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. பெண்களின் நலன் காப்பதற்காகவே போக்சோ எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன.. Source Link

‛விடாமுயற்சி' படக்குழுவிற்கு கெடு வைத்த அஜித்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் கடந்த சில மாதங்களாக 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் 70 சதவீத படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்புக்கு சற்று ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. … Read more

அது சீன்லயே இல்லை.. திடீரென ரஜினி சார் என் கன்னத்தை கிள்ளிட்டாரு.. இளம் நடிகை பளிச் பேட்டி!

சென்னை: திடீரென நடிகர் ரஜினிகாந்த் தனது கன்னத்தை கிள்ளிட்டார் என இளம் நடிகை பெர்னா சமீபத்திய பேட்டியில் ஓபன் செய்துள்ளார். இளம் நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார் பெர்னா. இலங்கையில் படித்துக் கொண்டிருந்த தனக்கு மாடலிங் மீது ஆர்வம் வந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்து சினிமா சான்ஸ் தேடி ரொம்பவே அலைந்ததாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் ரொம்பவே

'இந்தியா' கூட்டணியின் பாதி தலைவர்கள் சிறையிலும், மீதிப்பேர் ஜாமீனிலும் உள்ளனர் – ஜே.பி.நட்டா

ஜெய்ப்பூர், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜாலவார் தொகுதியில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், “‘இந்தியா’ கூட்டணி என்பது ஊழல் பாதுகாப்பு கூட்டணி ஆகும். அதில் உள்ள கட்சிகளில் தலைவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார். பொதுச்செயலாளரும் அதே குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார். மந்திரிகளும் அதே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இத்தகைய கட்சிகளைத்தான் குடும்ப கட்சிகள் என்று சொல்கிறோம். காங்கிரஸ் … Read more

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா ஆட்டம்; டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 8-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னையில் நடைபெறும் 3-வது லீக் ஆட்டம் இதுவாகும். சென்னை-கொல்கத்தா மோதலுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் … Read more

மெக்சிகோவில் தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளில் பெண் மேயர் வேட்பாளர் சுட்டுக்கொலை

மெக்சிகோ சிட்டி, தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் வரும் ஜூன் 2-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே அங்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசியல் ரீதியான கொலைகளும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் ஆளும் கட்சி பெண் மேயர் வேட்பாளர் கிசெலா கெய்டன், தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே, குவானாஜுவாடோவில் உள்ள செலாயா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 38 வயதான கெய்டன், ஒரு … Read more

மீண்டும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ZX, ZX(O) முன்பதிவு துவங்கியது

டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ் எம்பிவி காருக்கு மீண்டும் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது . ஜனவரி முதல் முன்பதிவு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 1 முதல் புதிய விலை அறிவிக்கப்பட்ட பின்னர் புக்கிங் ஆனது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டொயோட்டா நிறுவனம் ஒரு சதவீத விலை உயர்வை செயல்படுத்தி   தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் புக்கிங் ஆனது நிறுத்தப்பட்டு இருந்தது மீண்டும் புக்கிங் ஆனது துவங்கப்பட்டுள்ளது. ZX(O) விலை ரூ30.98 … Read more