Month: April 2024
செய்தித் தெறிப்புகள் @ ஏப்.3: ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் முதல் ராகுல் வேட்புமனு தாக்கல் வரை
முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்: “முதல்வர் ஸ்டாலின் வீதிக்கு வந்தால் மக்கள் அவர்மீது எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். முதல்வர் வீதி வீதியாக வர வேண்டும். ஆனால், அவர் வருவதில்லை. முதல்வரை ரோடு ஷோ வர சொல்லுங்கள் பார்க்கலாம். தமிழகத்தின் ஒரு நகரத்தை தேர்ந்தெடுத்து 10 கிலோ மீட்டர் வரை அவரே ஒரு ரோடு ஷோ வரட்டும். எத்தனை பேர் முதல்வரைக் காண வருகிறார்கள் என்பதை பார்க்கலாம், நான் சவால் விடுகிறேன். பிரதமர் மோடி கோவையில் … Read more
சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. பிஜப்பூர் மாவட்டத்தின் கோர்சோலி வனப் பகுதியில் நக்சலைட்களின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போஸீஸ் படை மற்றும் அதன் கமாண்டோ பிரிவான கோப்ரா ஆகியவை இணைந்து கடந்த 1ம் தேதி முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனத்தில் … Read more
இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடக்கம்: பயனர்கள் பாதிப்பு
சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக டவுன் டிட்டெக்டர் தளத்தில் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் புதன்கிழமை (ஏப்ரல் 3) இரவு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் டவுன் டிட்டெக்டர் தளத்தில் இதனை தெரிவித்திருந்தனர். இதை வாட்ஸ்அப் தரப்பும் உறுதி செய்துள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு … Read more
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை அரசியல் ஆதாயத்துக்காகத் தாரை வார்க்கும் மோடி : காங்கிரஸ்
சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமது அரசியல் ஆதாயத்துக்காக இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை மோடி தாரை வார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி ஒன்றிலும், நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கச்சத்தீவு குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் அடிப்படையற்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார்கள். கச்சத்தீவு குறித்து சமீப காலத்துப் பேச்சுகளினால் இலங்கையில் 75 சதவிகித சிங்களர்கள் … Read more
ஒளிப்பதிவாளரை விவாகரத்து செய்த நடிகை
மலையாள சினிமாவின் முக்கியமான நடிகை மஞ்சு பிள்ளை. பழம்பெரும் நடிகர் எஸ்.பி.பிள்ளையின் மகள். குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சிநேகிதியே, மன்மதன் அன்பு உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் முகுந்தன் என்ற தொலைக்காட்சி நடிகரை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 2000மாவது ஆண்டில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவை திருமணம் செய்து கொண்டார். சுஜித், கேரளா கபே, த்ரிஷ்யம், லூசிபர், மிஸ் … Read more
OTT Release: இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்.. லால் சலாம் முதல் ஹனுமான் வரை!
சென்னை: ஒவ்வொரு வாரமும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் புது படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், ஓடிடியில் ஏராளமான படங்கள் மற்றும் வெப் தொடர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த
“பாஜகவுக்கு எதிராக நானும் திருமாவளவனும்…” – கமல்ஹாசன் பிரச்சாரம் @ சிதம்பரம்
சிதம்பரம்: “ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், நான் தம்பி திருமாவளவனோடு தோள் உரசி களம் கண்டிருக்கிறோம். இந்த முறை பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்துவிட்டால், ஜனநாயகமே இருக்காதோ என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் அறிஞர்கள் கவலை மட்டும் படுவார்கள். நாங்கள் வீரர்கள் களம் கண்டே ஆக வேண்டும்” என்று சிதம்பரத்தில் போட்டியிடும் திருமாவளவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மநீம தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக … Read more
பாஜகவின் ‘இணைய’ ஆளுமை… யார் இந்த தவால் படேல்? | 2024 தேர்தல் கள புதுமுகம்
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், குஜராத்தின் வல்சாத் மக்களவைத் தொகுதியில் (எஸ்டி) களம் காண்கிறார் தவால் படேல். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் தேர்தல் களம் சற்று விறுவிறுப்பாகவே காணப்படுகிறது. சமூக ஊடகங்களை கையாளுவதில் கைதேர்ந்தவராக அறியப்படும் தவால் படேல் பின்புலம் அறிவோம். சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல் களம்: 2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் … Read more